தமிழகம்

பனையூர் பார்ட்டியில் ‘கோட்டை’த் தலைவர் ஐக்கியமா? | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

பாஜக தலைமையின் ஆலோசனைப்படிதான் தான் இயங்குவதாக படித்துப் படித்து சொல்லி வந்த ‘பாளைய’த்தின் ‘கோட்டை’த் தலைவர், பனையூர் பார்ட்டியில் ஐக்கியமாகப் போகிறாராம். அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன.

எடக்கானவர் நவம்பர் 30-ல் தனது ‘பாளைய’த் தொகுதிக்கு விசிட் அடிக்கவிருக்கும் நிலையில், இந்த ட்விஸ்ட் முடிவை எடுத்திருக்கிறார் ‘கோட்டை’த் தலைவர். எடக்கானவருக்கு எதிராக உள்ளுக்குள் உக்ரமாக இருந்தாலும் வெளிப் பார்வைக்கு சிரித்தபடி சிவில் வார் நடத்தி வரும் தாமரைக் கட்சி தலைவர் தான் ‘கோட்டை’த் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை பனையூர் பக்கம் ஸ்டியரிங்கை திருப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இதனிடையே, இழுப்புக்கு நாள் குறித்து விட்டாலும், “அவசரப் படாதீங்கப்பா... அந்த மனுசன நம்ப முடியாது” என்று ‘கோட்டை’த் தலைவர் தங்கள் பேட்டைக்கு வருவதிலும் பனையூர் பார்ட்டிக்குள் சிலர் சந்தேகத்தைக் கிளப்புகிறார்களாம்.

SCROLL FOR NEXT