தமிழகம்

3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி: தமிழக அரசுக்கு ஆளுநர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: பார​தி​யார், பார​தி​தாசன், பெரி​யார் பல்​கலைக்​கழகங்​களுக்கு புதிய துணைவேந்​தரை தேர்வு செய்ய அமைக்​கப்​பட்ட தேடு​தல் குழுக்​களில் யுஜிசி பிர​தி​நி​தியை சேர்த்து அரசாணை வெளி​யிடு​மாறு பல்கழகங்களின் வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இதுதொடர்​பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: யுஜிசி விதி​முறை​கள்​-2018-ன்படி பல்​கலைக்​கழக துணைவேந்​தரை தேர்வு செய்ய அமைக்​கப்​படும் தேடு​தல் குழு​வில் யுஜிசி​யின் பிர​தி​நி​தி​யும் இடம்​பெற வேண்​டும். தமிழகத்​தில் மாநில பல்​கலைக்​கழகங்​களின் சட்​டத்​தின்​படி, தேடு​தல் குழு பரிந்​துரை செய்​யும் 3 நபர்​களில் ஒரு​வர் பல்​கலைக்​கழக வேந்​தரான ஆளுந​ரால் துணைவேந்​த​ராக நியமிக்​கப்​படு​கிறார்.

          

இந்​நிலை​யில், பல்​கலைக்​கழகத்தின் துணைவேந்​தர்​களை தேர்​வு செய்ய வேந்​தருக்கு பதிலாக அரசுக்கு அதி​காரம் வழங்​கும் வகையில் பல்​கலைக்​கழக சட்​டங்​களில் திருத்​தங்களை தமிழக அரசு கொண்​டு​ வந்​தது. இதற்கு சென்னை உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத்தடை விதித்​தது. மேலும் இந்த விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தி​லும் வழக்கு நிலு​வை​யில் இருந்து வரு​கிறது.

அவ​காசம் நீட்​டிப்பு: இத்​தகைய சூழலில் கோவை பார​தி​யார் பல்​கலைக்​கழகம், திருச்சி பார​தி​தாசன் பல்​கலைக்கழகம், சேலம் பெரி​யார் பல்​கலைக்​கழகம் ஆகிய​வற்​றுக்கு புதிய துணைவேந்​தர்​களை தேர்​வுசெய்ய தேடு​தல் குழுக்​கள் அமைத்​திருப்​பதும், அக்​குழுக்​களுக்​கான காலஅவ​காசத்தை நீட்​டித்​திருப்​பதும் கவலை அளிக்கக்​கூடிய விஷ​யம் ஆகும்.

நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருந்​து​வரும் நிலை​யில் துணைவேந்​தர் தேடு​தல் குழு​வுக்​கான கால அவ​காசத்தை மார்ச் 21 வரை நீட்​டித்து கடந்த டிசம்​பர் 22-ம் தேதி தமிழக அரசால் அரசாணை​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

வழக்​கு​கள் நிலுவையில் இருக்​கும் நிலை​யிலும், இடைக்கால தடை பிறப்​பிக்​கப்​பட்​டுள்ள நிலை​யிலும் அரசு எடுத்த நிர்​வாக நடவடிக்​கைகள் சட்​டத்​துக்கு புறம்​பானவையாகும். மேலும் அவை நீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ரானவையாகும். இந்த விவகாரத்​தில் தொடர்ந்து நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டால் அவை சட்​டப்​படி செல்​லாது. அதோடு அரசு மற்​றும் பல்​கலைக்​கழக நிர்​வாகத்​தில் பல்​வேறு சிக்​கல்​களை​யும் ஏற்​படுத்​தும்.

எனவே, உச்ச நீதி​மன்ற தீர்ப்பு வரும் வரை, புதிய துணைவேந்​தர் தேர்வு பணி​களை தொடர்ந்து மேற்​கொள்​ளும் வகை​யில் தேடு​தல் குழுக்​களில் யுஜிசி உறுப்​பினரையும் சேர்த்து உடனடி​யாக அரசாணைகளை வெளி​யிடு​மாறு தமிழக அரசுக்கு வேந்​தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT