தமிழகம்

தாராபுரத்துக்கு படையெடுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள்: உதயநிதி இன்று பிரச்சாரம்

செய்திப்பிரிவு

தாராபுரம்: தா​ராபுரத்​தில் வாக்​காளர்​களைக் கவர முன்​னணி அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் அடுத்​தடுத்து தாராபுரத்​தில் முகாமிட உள்​ள​தால் தேர்​தல் களம் சூடு​பிடிக்க தொடங்கி உள்​ளது.

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் (தனி) தொகு​தி​யில் போட்டி கடுமை​யாகி​யுள்​ளது. அதி​முக சார்​பில் வெற்றி பெற்று தனது பதவியை ராஜி​னாமா செய்த சத்​ய​பாமா தவெக​வில் இணைந்து வேட்​பாள​ராக களம் காண்​கிறார்.

திமுக சார்​பில் அக்​கட்​சி​யின் வழக்​கறிஞர் அணி​யைச் சேர்ந்த சுகன்​யா, அதி​முக தரப்​பில் பானு​ம​தி, நாதக சார்​பில் கார்த்​தி​கா, இந்திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் லட்​சுமணன் மற்றும் சுயேச்​சைகள் உள்பட 22 பேர் போட்​டி​யிடு​கின்​றனர். அவர்கள் வாக்​காளர்​களை சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதர​வாக கட்​சிகளின் தலை​வர்​களும் தாராபுரத்​தில் தங்​களது தேர்தல் பிரச்​சா​ரத்தை தொடங்​க​வுள்​ளனர்.

இதன்படி திமுக வேட்​பாளர் சுகன்​யாவை ஆதரித்து திமுக இளைஞரணி செய​லா​ள​ரும் எதிரக்​கட்​சித் தலை​வரு​மான உதயநிதி இன்று (செப்​.26) தாராபுரம் வருகை தரு​கிறார். அதி​முக வேட்​பாளர் பானு​ம​தியை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி 28, 29 ஆகிய 2 நாட்​கள் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள உள்​ளார்.

தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மாவை ஆதரித்து பரப்​புரை செய்ய, முதல்​வர் விஜய் செப்​.30-ம் தேதி வருகை தந்​து, பொதுக்​கூட்​டத்​தில் பேசுகிறார். இதற்கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன. அக். 4-ல் ரோடு ஷோவிலும் பங்​கேற்​கிறார்.ஏற்​கெனவே நாதக தலைமை ஒருங்கிணைப்​பாளர் சீமான், கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் தலை​வர்​கள் தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்கிவிட்​டனர்.

முன்​னணித் தலை​வர்​களின் வரு​கை​யால் தா​ராபுரம் தொகு​தி​யில் தேர்​தல்​ திரு​விழா களை​கட்​டத்​ தொடங்​கியுள்​ளது.

SCROLL FOR NEXT