மாதவரம் தொகுதி திமுக வேட்பாளரான தற்போதைய எம்எல்ஏ எஸ்.சுதர்சனத்தை ஆதரித்து மாதவரம் பஜார் பகுதியில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

 
தமிழகம்

மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஊழல் குற்றச்சாட்டால் ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்டவர்: உதயநிதி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

சென்னை: ​மாதவரம் தொகு​தி​யி்ல் ஏற்​கெனவே இரு​முறை தொடர்ச்​சி​யாக வெற்​றி​பெற்று எம்​எல்​ஏ-​வாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள எஸ்​.சுதர்​சனம் மூன்​றாவது முறை​யாக திமுக சார்​பில் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டுள்​ளார். இவரை எதிர்த்து அதி​முக சார்​பில் முன்​னாள் அமைச்​ச​ரான வி.மூர்த்தி போட்​டி​யிடு​கிறார்.

இந்​நிலை​யில் எஸ்​.சுதர்​சனத்தை ஆதரித்து துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், மாதவரம் பஜார் பகு​தி​யில் நேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: மாதவரம் ​தொகு​தி​யில் அதி​முக சார்​பில் நிறுத்​தப்​பட்​டுள்ள மூர்த்தி எப்​படிப்​பட்​ட​வர் என்​பது உங்​களுக்கு நன்​றாகத் தெரி​யும்.

          

ஆவின் பாலில் கலப்​படம் செய்து ஊழல் செய்​தவர். அதனால் அமைச்​சர் பதவி​யில் இருந்தே நீக்​கி​னார் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா. திமுக வேட்​பாளர் மாதவரம் சுதர்​சனத்​தைப் பற்றி உங்​கள் எல்​லோருக்​கும் நன்​றாகத் தெரி​யும்.

எளிமை​யானவர். தொகுதி மக்​களை அரவணைத்து செல்​பவர். கடந்த 10 ஆண்​டு​களாக பல்​வேறு திட்​டங்​களை நிறைவேற்​றி​யுள்​ளார்.

கடந்​த​முறை 57 ஆயிரம் வாக்கு வித்​தி​யாசத்​தில் அவரை வெற்றி பெறச் செய்​தீர்​கள். இம்​முறை ஒரு லட்​சம் வாக்கு வித்​தி​யாசத்​தில் அவரை 3-வது முறை​யாக பேர​வைக்கு அனுப்ப வேண்​டும்​. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT