தமிழகம்

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: உதயநிதி பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: மாற்றுத் திறனாளி விளை​யாட்டு வீரர்​களை ஊக்​கு​விப்​ப​தில் இந்​தி​யா​விலேயே தமிழகம் ‘நம்​பர் ஒன்’ மாநில​மாக திகழ்​வ​தாக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டாலின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

சிஎஸ்ஐ மெட்​ராஸ் டையோசீஸ் சார்​பில் நடை​பெற்ற தடைகளைத் தாண்​டிய சாம்​பியன்​கள் (சாம்​பியன்ஸ் பியாண்ட் பேரியர்​ஸ்) விளை​யாட்டு போட்​டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி விளை​யாட்டு வீரர்​களுக்கு பதக்​கம் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி வீரர்​களுக்கு பதக்​கம் அணி​வித்​து, சான்​றிதழ்​களை வழங்​கி​னார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: மாற்​றுத்​திறன் குழந்​தைகளும், சிறப்பு குழந்​தைகளும் தடைகளை உடைத்து உண்​மை​யான சாம்​பியன்​களாக உரு​வாகி கொண்​டிருக்​கிறார்​கள். தமிழகத்​தில் இருந்து ஏராள​மான பாரா தடகள விளை​யாட்டு வீரர்​கள் தொடர்ந்து பல்​வேறு சாதனை​களைப் படைத்து வரு​கின்​றனர்.

அதற்​கேற்ப மாற்றுத் திறனாளி விளை​யாட்டு வீரர்​களை ஊக்​கு​விப்​ப​தில் இன்​றைக்கு தமிழகம் தான் இந்​தி​யா​விலேயே ‘நம்​பர் ஒன்’ மாநில​மாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் 250 மாற்​றுத்​திறன் வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.30 கோடிக்கு உயரிய ஊக்​கத்​தொகை, 500 பேருக்கு விளை​யாட்டு உபகரணங்​கள் வாங்க, பல்​வேறு சர்​வ​தேச, தேசிய போட்​டிகளில் கலந்​து​கொள்ள தமிழ்​நாடு சாம்​பியன்ஸ் பவுண்​டேஷன் மூலம் ரூ.8 கோடி, தேசிய மற்​றும் சர்​வ​தேசப் போட்​டிகள், பாராலிம்​பிக் போட்​டிகளில் பங்​கேற்று சாதனை படைத்த 5 மாற்​றுத்​திறன் வீரர், வீராங்​க​னை​களுக்கு 3 சதவீத இட ஒதுக்​கீட்​டின்படி அரசு வேலை உள்​ளிட்​டவை வழங்​கப்​பட்​டுள்​ளன.

இந்த ஆண்டு 25 மாற்​றுத்​திறன் வீரர்​களுக்கு அரசு வேலை வாய்ப்பை உரு​வாக்​கித் தர இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. மாற்​றுத்​திறன் வீரர், வீராங்​க​னை​கள் பயிற்சி பெறு​வதற்​காக, தலா ரூ.1.50 கோடி​யில் 5 மாவட்​டங்​களில் சிறப்பு பாரா விளை​யாட்டு மைதானங்கள் அமைக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மேலும் புதி​தாக 6 மாவட்​டங்​களில் பாரா விளை​யாட்டு மைதானங்​கள் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

அதே​போல் சென்​னை​யிலும், நவீன வசதி​களு​டன் கூடிய பாரா பேட்​மிண்​டன் அகாடமி முதன்​முறை​யாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இவ்​வாறு அவர் பேசினார்.

இந்​நிகழ்​வில் அமைச்​சர்​கள் பி.கே.சேகர்​பாபு, மனோ தங்​க​ராஜ், மாநக​ராட்சி மேயர் பிரி​யா, மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யத் தலை​வர் ஜோ.அருண், விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்யா மிஸ்​ரா, மெட்​ராஸ் டயோசீஸ் பிஷப் பால் ஃபி​ரான்​சிஸ் ரவிச்​சந்​திரன், சிஎஸ்ஐ மெட்​ராஸ்​ டையோசீஸ்​ நிர்​வாகி​கள்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT