படம்: எஸ்.சத்தியசீலன்

தமிழகம்

உதயநிதி சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி: வேட்பு மனுவில் தகவல்

செய்திப்பிரிவு

துணை முதல்​வர் உதயநிதிக்கு ரூ.20.64 கோடிக்கு அசையும், அசையா சொத்​துகள் இருப்​ப​தாக பிர​மாண பத்​திரத்​தில் தெரி​வித்​துள்​ளார்.

நடை​பெற உள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சேப்​பாக்​கம்- திருவல்லிக்​கேணி தொகு​தி​யில் போட்​டி​யிடும் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வேட்​புமனுவுடன் தாக்​கல் செய்த பிர​மாணப் பத்​திரத்​தில் இடம் பெற்​றுள்ள விவரங்​கள் வரு​மாறு: உதயநிதி தனது கையிருப்​பில் ரூ.50,000, அவரது மனைவி கிருத்​திகா கையிருப்​பில் ரூ.75,000 இருப்​ப​தாக தெரி​வித்​துள்​ளார்.

மகள் தன்​மயா வங்​கிக் கணக்​கில் நிரந்தர வைப்பு நிதி​யாக ரூ.2,56,940 இருப்​புள்​ளது. அதே​போல், தனது பெயரில் ரூ.1 கோடி மதிப்​பிலான டிபென்​டர் கார், ரூ.23 லட்​சம் மதிப்​புடைய இன்னோவா கார் இருப்​ப​தாக​வும், தங்​கம், வெள்​ளி, வைர நகைகள் ஏது​மில்லை என்​றும், மனைவி கிருத்​தி​கா​விடம் 1,600 கிராம் தங்க நகைகள் இருப்​ப​தாக​வும் அதில் குறிப்​பிட்​டுள்​ளார்.

          

ஒட்​டுமொத்​த​மாக, அசை​யும் சொத்​துகளாக உதயநி​தி​யிடம் ரூ.12.92 கோடி​யும், அவரது மனை​வி​ யிடம் ரூ.13.25 கோடி​யும், மகளிடம் ரூ.2.56 லட்​ச​மும் உள்​ளன. இதுத​விர, உதயநிதி பெயரில் ரூ.7.72 கோடி மதிப்​பிலான அசையா சொத்​து​கள் உள்​ளன.

அவரது மனைவி கிருத்​திகா உதயநிதி பெயரில் அசையா சொத்​துகள் இல்​லை. மொத்​த​மாக உதயநிதி பெயரில் மட்​டும் ரூ.20.64 கோடிக்கு அசை​யும், அசையா சொத்​து​கள் உள்​ளன. மேலும், அவர் பெயரில் தற்​போது 10 குற்​ற​வியல் வழக்​குள் நிலு​வை​யில் இருக்கின்​றன.

இதற்​கிடையே, கடந்த 5 ஆண்​டு​களில் வரு​மானவரி கணக்​கில் காட்​டப்​பட்ட வரு​மானம் அடிப்​படை​யில் உதயநி​தி​யை​விட, கிருத்தி​கா​வின் வரு​வாய் அதி​கரித்​துள்​ளது. 2022–23-ம் ஆண்​டில் ரூ.7.94 கோடி​யாக இருந்த உதயநி​தி​யின் ஆண்டு வரு​மானம், 2024–25-ம் ஆண்​டில், ரூ.10.40 லட்​ச​மாக குறைந்​துள்​ளது.

அதே​போல், 2023–24-ம் ஆண்​டில், ரூ.44.94 லட்​ச​மாக இருந்த, கிருத்தி​கா​வின் வரு​மானம், 2024–25-ல் ரூ.2.92 கோடி​யாக உயர்ந்துள்​ளது.

மேலும், 2021-ம் ஆண்டு தேர்​தலில் உதயநிதி காட்​டியதை​விட, அவரின் சொத்து மதிப்பு தற்​போது குறைந்​துள்​ளது. 2021-ல் உதயநிதிக்கு ரூ.21.13 கோடி​யும், கிருத்​தி​கா​வுக்கு ரூ.1.15 கோடி​யும் அசை​யும் சொத்​துகள் இருந்தன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

விடு​பட்ட இன்​பநிதி

துணை முதல்​வர் உதயநிதி தாக்​கல் செய்த சொத்து விவரங்​கள் அடங்​கிய பிர​மாண பத்​திரத்​தில், அவரது மகன் இன்​பநிதி பெயர் மற்றும் சொத்து விவரங்​கள் இடம் பெற​வில்​லை.

2021-ம் ஆண்டு உதயநிதி தாக்​கல் செய்த பிர​மாண பத்​திரத்​தில் இன்பநிதி பெயர் இடம் பெற்​றிருந்​தது. ஆனால், தற்​போது அவர் பெயரில்​லை. மேலும், இன்​பநிதி தற்​போது ‘ரெட் ஜெயிண்ட்’ நிறுவனத்​தின் தலைமை செயல் அதி​காரி​யாக செயல்​படு​கிறார் என்​பது கவனிக்​கத்​தக்​கது.

SCROLL FOR NEXT