தமிழகம்

“இரட்டை அர்த்தமில்லை; ஒரே அர்த்தத்தில் தான் பேசினேன்” - உதயநிதி விளக்கம்

செய்திப்பிரிவு

திருச்சி: ​கா​விரி பிரச்​சினை தொடர்​பாக இரட்டை அர்த்​தத்​தில் பேச​வில்​லை. ஒரே அர்த்​தத்​தில் தான் பேசினேன் என எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி தெரிவித்தார்.

தஞ்​சாவூர் மாவட்​டம் செங்​கிப்​பட்டி காவல் நிலை​யத்​தில் விசா​ரணை முடிந்த பின் விடுக்​கப்​பட்ட அவர், சென்னை செல்​லும் வழி​யில் திருச்சி விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று இரவு கூறியது: தஞ்​சாவூரில் விவ​சா​யிகளுக்கு ஆதர​வாக திமுக சார்​பில் நடை​பெற்றற ஆர்ப்​பாட்​டத்​தில், இந்த ஆட்​சி​யில் விவ​சா​யிகளுக்கு செய்த துரோகங்​களை பற்​றித்​தான் பேசினேன். தண்​ணீர் தர மறுக்​கும் கர்​நாட​காவை எதிர்த்து பேச​வும் தைரி​யம், தெம்பு இல்​லை. எனவே முதல்​வர் இதற்​கெல்​லாம் பதில் சொல்ல வேண்​டும்.

நாங்​கள் கேட்​கும் எந்​தக் கேள்விக்​கும் பதில் சொல்ல முடி​யாத திராணி​யில்​லாத டம்மி முதல்​வர் நமக்கு வாய்த்​துள்​ளார். அதையெல்​லாம் விட்​டு​விட்டுநான் பேசாத ஒரு விஷ​யத்தை ‘கட் காபி பேஸ்ட்’ செய்து சில விஷ​யங்​களை சேர்த்​துள்​ளனர். இந்த அரசின் கொள்​கையே திசைத் திருப்​பும் யுக்தி தான்.

நான் பேசாத விஷ​யத்தை திரித்து பரவ​விட்​டுள்​ளனர். போலீ​ஸார் கைது செய்ய வந்​தனர். நானும் முழு ஒத்​துழைப்பு அளித்​தேன். நீதி​மன்​றத்​தில் அரசு வழக்​கறிஞர் கைது செய்​யும் நோக்​கம் கிடை​யாது, விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​கிறோம் என்​றார். போலீ​ஸார் முறை​யாக நடத்​த​வில்​லை.

நான் எந்​த​வித​மாக தவறான எண்​ணத்​தில், புண்​படுத்த வேண்​டும்; பெண்​களை தாழ்த்​திப் பேச வேண்​டும் என்ற எண்​ணம் துளிக்​கூட கிடை​யாது. என்குடும்​பம் என்னை அப்​படி வளர்க்​க​வில்​லை.

எனக்கு திரு​மண​மாகி மனை​வி, ஒரு பெண் குழந்​தை, தங்கை உள்​ளனர். தமிழகத்​தில் உள்ள ஒவ்​வொரு தாய்​மாரும் எனது தாயாக, தங்​கை​யாக நினைக்​கிறேன். பொய் வழக்கு போட்டு அச்​சுறுத்த நினைத்​தனர். அதற்கு பயப்​படும் ஆள் நான் இல்​லை.

சில தலை​வர்​கள் நான் பேசி​யதை பார்க்​காமல் ஆரா​யாமல் நான் தவறாக பேசி​ய​தாக கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். அது எனக்கு வருத்​த​மாக உள்​ளது. என்னை கைது செய்​ததற்​காக நான் பயப்பட மாட்​டேன். நான் இரட்டை அர்த்​தத்​தில் பேச​வில்​லை. ஒரே அர்த்​தத்​தில் தான் பேசினேன். தொடர்ந்து பேசுவேன். இந்த அரசுக்கு நிச்​ச​யம் மக்​கள் பதிலை தரு​வார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT