தமிழகம்

செங்கல்பட்டு, மேடவாக்கத்தில் நடந்த விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்​றும் மேட​வாக்​கம் பகு​தி​களில் நடை​பெற்ற 2 சாலை விபத்​துகள் பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளன. இந்த இரண்டு விபத்​துகளில் ஆம்னி பேருந்​தின் துணை ஓட்​டுநர், பால் விநி​யோக பணி​யில் ஈடு​பட்​டிருந்த 15 வயது சிறு​வன் உயி​ரிழந்​தனர்.

மேலும் 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். செங்​கல்​பட்டு புறவழிச்​சாலை​யில் பழவேலி அரு​கே, கேரளா​வில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்​து, முன்​னால் சென்ற சென்ற டிப்​பர் லாரியை முந்​திச் செல்ல முயன்​ற​போது பின்​புறம் பலமாக மோதி​யதில் டிப்​பர் லாரி சாலை​யின் குறுக்கே கவிழ்ந்​து.

பேருந்​தின் முன்​பகுதி சேதமடைந்​தது. இந்த விபத்​தில் துணை ஓட்​டுநர் (கிளீனர்) அருண் பாலாஜி (20) சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். பேருந்​தில் பயணம் செய்த கமல்​ராஜ் (35), சங்​கர் (40), ராஜேஸ்​வரி (52) ஆகியோர் காயமடைந்து செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். கிரேன் மூலம் விபத்​துக்​குள்​ளான வாக​னங்​கள் அப்​புறப்​படுத்​தப்​பட்டு போக்​கு​வரத்து சீரமைக்​கப்​பட்​டது.

இதே​போல், தாம்​பரம் அருகே மேட​வாக்​கம் பிர​தான சாலை​யில் வடக்​குபட்டு சாலை அருகே நேற்று அதி​காலை இரண்டு இருசக்கர வாக​னங்​கள் மோதி​ய​தில், பால் பாக்​கெட் விநி​யோகம் செய்து வந்த பென்​னியல் (15) பலத்த காயமடைந்து மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யில் உயி​ரிழந்​தார்.

மற்​றொரு இருசக்கர வாக​னத்தை ஓட்டி வந்த சுஜின் (22), அவருடன் பயணம் செய்த யஷ்வந்த் (16) ஆகியோர் படு​காயமடைந்து தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

இரு விபத்​துகள் தொடர்​பாக​வும் செங்​கல்​பட்டு போலீ​ஸார், பள்​ளிக்கரணை போக்​கு​வரத்து போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, விபத்​து குறித்​து தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT