தமிழகம்

சங்கரன்கோவிலில் ஜீப் மீது வேன் மோதி ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

தேனியைச் சேர்ந்த 17 பேர் பலத்த காயம்

செய்திப்பிரிவு

தென்காசி: சங்கரன்கோவில் அருகே ஜீப் மீது வேன் மோதியதில், ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயமடைந்தனர்.

ராமேசுவரத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (34). இவரது நண்பர்கள் மருது (30), தங்கச்சிமடம் காளி உதயசங்கர், களஞ்சியம், ரயில்வே நிறுத்தம் நகர் ஜான், ராமேசுவரம் தேசிகன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவில் ஜீப்பில் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தனர். ஜீப்பை இளையராஜா ஓட்டி வந்தார்.

இதேபோல், தேனியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவில் சுற்றுலா வேனில் புறப்பட்டு, சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு வந்துள்ளனர்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இவ்விரு வாகனங்களும், கழுகுமலை - சங்கரன்கோவில் சாலையில் உள்ள பொதிகை நகர் பகுதியில் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் இளையராஜா மற்றும் மருது ஆகியோர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜீப்பில் வந்த 4 பேரும் வேனில் வந்த தேனியைச் சேர்ந்த 17 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் உதயசங்கர் என்பவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து குருவிகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT