கோப்புப் படம் 

 
தமிழகம்

சேலம்: காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய 2 ரவுடிகள் நள்ளிரவில் கைது

வி.சீனிவாசன்

சேலம்: சேலம் அருகே ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய இரண்டு ரவுடிகளை உடனடியாக போலீஸார் தேடி கண்டுபிடித்து நள்ளிரவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அருகே ஆட்டையாம்பட்டி கண்டர்குல மாணிக்கம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகள் சந்தோஷ் குமார் மற்றும் பிரபு.

இவர்களை ஆட்டையாம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் மற்றும் போலீஸார் வழக்கு சம்பந்தமாக நேற்று காலை அழைத்து வந்து விசாரித்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நீதிமன்றத்திற்கு சந்தோஷ் குமார் மற்றும் பிரபு ஆகியோரை அழைத்துச் செல்ல போலீஸார் முடிவெடுத்தனர். இதனை அறிந்த ரவுடிகள் சந்தோஷ் குமார் மற்றும் பிரபு காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர்.

ஆட்டையாம்பட்டி போலீஸார் தப்பி ஓடிய இரண்டு ரவுடிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடினர். போலீஸாரின் தொடர் தேடுதலில் நேற்று நள்ளிரவு இரண்டு ரவுடிகளையும் கண்டுபிடித்து கைது செய்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT