போலீஸில் தவெக மகளிரணி புகார்

 
தமிழகம்

திமுக தலைவர் ஸ்டாலின் மீது போலீஸில் தவெக மகளிரணி புகார்

என்.சன்னாசி

மதுரை: தவெக பெண் வேட்பாளரை உருவக் கேலி செய்த முன்னாள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை தெப்பக்குளம் போலீசில் தவெக மகளிரணியினர் புகார் கொடுத்துள்ளனர்.

மதுரை தெற்கு தொகுதி தவெக மகளிரணி சார்பில் ரம்யா இன்று தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி, நடந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தவெக பெண் வேட்பாளர் சத்தியபாமாவை உருவக் கேலி செய்து பேசிய காணொலி சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.

பெண் உடல் தோற்றத்தை பொதுமேடையில் கேலி செய்து அவமதிப்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட கண்ணியம், மரியாதையை பாதிக்கிறது.

முன்னாள் முதல்வர் என்ற முறையில் பொது வாழ்வில் நீண்ட நாள் அனுபவம் கொண்ட ஒருவர், பொதுமேடையில் தெரிவிக்கும் கருத்து பொதுமக்கள், ஊடகங்களில் பரவலாக கவனத்தை பெறுகிறது. புகார் மீது உரிய சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT