தமிழகம்

சட்டப்பேரவை தேர்தலில் தவெக ரூ.19.8 கோடி செலவு: திமுகவின் செலவில் 10-ல் ஒரு பங்கு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. இதில் போட்​டி​யிட்ட அரசி​யல் கட்​சிகள் தேர்​தல் ஆணை​யத்​தின் விதி​முறை​களின்​படி தங்​கள் தேர்​தல் வரவு-செலவு கணக்​கு​களைத் தாக்​கல் செய்​ய​வேண்​டும்.

அதன்​படி தமிழகத்தில் திமுக, அதி​முக, நாம் தமிழர் ஆகிய கட்​சிகள் தங்​களின் தேர்​தல் செல​வினபிர​மாணப் பத்​திரங்​களை தேர்​தல் ஆணை​யத்​திடம் அதி​காரப்​பூர்​வ​மாக தாக்​கல் செய்​துள்​ளன. அதி​கபட்​ச​மாக திமுக ரூ.197 கோடி​யும், அதி​முக ரூ.112 கோடி​யும் செலவு செய்து இருப்பது தெரியவந்தது.

இதில் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட தவெகவின் தேர்தல் செலவினங்கள் தொடர்பான கணக்கு வழக்குகளை அக்கட்சியின் பொருளாள ரும், அமைச்சருமான வெங்கட்ரமணன் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.அதில் ஒட்டுமொத்தமாக சட்டப்பேரவை தேர்தலில் தவெக ரூ.19.8 கோடி மட்டுமே செலவுசெய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில் விஜய்யின் விமானப் பயணச் செலவு ரூ.3.54 கோடி, விளம்பரச் செலவு ரூ.6.34 கோடி, பிரச்சாரப் பொருட்கள் ரூ.40.54 லட்சம், பொதுக்கூட்டம்,ரோடு ஷோ செலவு ரூ.2.06 கோடி, தேர்தல் காலத்தில் அனைத்து வழிகளிலும் கிடைத்த வரவுகள் ரூ.7.02 கோடி, விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் ரூ.40 லட்சம் செலவு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

திமுக செலவிட்ட தொகையான ரூ.197.84 கோடியுடன் ஒப்பிட்டால் தவெக பத்தில் ஒரு பங்காக ரூ.19.8 கோடி மட்டுமே செலவு செய்துள்ளது. அதாவது தேர்தலில் சொற்ப பணத்தை மட்டுமே செலவிட்டு தவெக ஆட்சியை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT