தமிழகம்

போக்குவரத்துத்​ துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்திடம் தவெக கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: போக்​கு​வரத்து அதி​காரி​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என தவெக சார்​பில் தேர்​தல் ஆணை​யத்​திடம் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக அக்​கட்​சி​யின் தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜுனா தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்​கிற்கு அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் முழு​வதும் இன்று (நேற்​று) வாக்​குப்​ப​திவு நடை​பெற்று வரும் நிலை​யில், நேற்று (நேற்று முன்​தினம்) நள்​ளிரவு முதல் கிளாம்​பாக்​கம், மாதவரம் உள்​ளிட்ட முக்​கிய பேருந்து நிலை​யங்​களில் லட்​சக்​கணக்​கான வாக்​காளர்​கள் பஸ் வசதி​யின்​றித் தவித்​தனர்.

வாக்​காளர்​கள் சரி​யான நேரத்​தில் தங்​கள் இலக்கை அடைந்து வாக்​களிப்​ப​தைத் தடுக்​கும் நோக்​கில் இது போன்ற குறை​பாடு​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது.

குறிப்​பாக, இளம் வாக்​காளர்​களைத் தேர்​தல் செயல்​பாட்​டில் பங்​கேற்க விடா​மல் தடுப்​ப​தற்​கான முயற்​சி​யாகவே இது பார்க்​கப்​படு​கிறது. அரசு அதி​காரி​கள் மற்​றும் போக்​கு​வரத்​துத் துறைத் தலை​வர்​களின் நிர்​வாகக் குறை​பாடு​களால் மக்​களின் ஜனநாயக உரிமை பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் வாக்​குப்​ப​திவை அதி​கரிக்​கப் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரும் நிலை​யில், இத்​தகைய தோல்வி​கள் அந்த முயற்​சிகளைச் சீர்​குலைப்​ப​தாக உள்​ளன.

எனவே, போக்​குவரத்து வசதி​களைச் செய்​யத்தவறிய போக்​கு​வரத்​துத் துறை முதன்​மைச் செய​லா​ளர் மற்​றும் மாநகர, விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர்​கள் மீது உரியஒழுங்கு நடவடிக்கை எடுத்​து, அவர்​களைப் பணிநீக்​கம் செய்ய வேண்​டும் என்று தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT