தமிழகம்

தவெக வேட்பாளர் பட்டியல் பிப்.2-ல் வெளியீடு?

செய்திப்பிரிவு

சென்னை: 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி வேட்​பாளர் பட்​டியல் தயாரிக்​கும் பணி​யில் தவெக தலைமை மும்​முர​மாக ஈடு​பட்டு வரு​கிறது. பிப். 2-ம் தேதி முதல்​கட்ட வேட்​பாளர் பட்​டியல் வெளி​யாகலாம் என்று தகவல் வெளி​யாகி உள்​ளது.

தமிழக வெற்​றிக் கழகம் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலை எதிர்கொள்​ளும் பணி​களை தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. 234 தொகு​தி​களி​லும் தனித்​துப் போட்​டி​யிட விஜய் தயா​ராகி வரு​கிறார். தேர்​தல் ஆணை​யம் ஒதுக்​கி​யுள்ள ‘விசில்’ சின்​னத்தை வலு​வான பிரச்​சார ஆயுத​மாக மாற்ற விஜய் திட்​ட​மிட்​டுள்​ளார். மதுரை, கன்​னியாகுமரி, நெல்​லை அல்லது தென்​காசி​யில் பிர​ச்சா​ரத்தை தொடங்​க திட்​ட​மிட்டுள்ளார்.

          

தொகு​திக்கு 3 பேர் கொண்ட முதல்​கட்ட வேட்​பாளர் பட்​டியலை தவெக தலைமை ஏற்க​னவே தயார் செய்​துள்​ளது. தற்​போது, போட்​டி​யிட விருப்​பம் உள்​ளவர்​களின் விவரங்​களை சேகரிக்​கும் பணி​களும் தொடங்​கி​யிருக்​கிறது. இப்​பணி​கள் முடிவடைந்​து, இறு​திப் பட்​டியல் தயாரானதும், தகு​தி​யான வேட்​பாளர்​களுக்கு நேரடி நேர்​காணல் நடத்த​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

கட்​சி​யின் 3-ம் ஆண்டு தொடக்க விழா பிப். 2-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. அன்று முதல்​கட்ட வேட்​பாளர் பட்​டியலை விஜய் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிடு​வார் என்று எதிர்பார்க்​கப்​படு​கிறது. இந்​தப் பட்​டியலில் பெண்​களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​படும் என்று கூறப்​படு​கிறது. மேலும், மாவட்​டச் செய​லா​ளர்​கள், பிரபலங்​கள், தொழில​திபர்​களுக்கு முக்​கிய இடங்​கள் ஒதுக்​கப்பட உள்​ள​தாக​வும் தவெக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.

சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் பேசிய அக்​கட்​சி​யின் தேர்​தல் மேலாண்மை பொதுச்​செய​லா​ளர் ஆதவ் அர்​ஜூ​னா, ‘‘தவெக வளர்ச்​சியை பார்த்து திமுக பயப்​படு​கிறது. இந்நேரம் 32 மாவட்​டங்​களில் தலை​வரின் சுற்​றுப்​பயணம் முடிந்​திருக்க வேண்​டும். கரூரில் செந்​தில் பாலாஜியை​யும், சில சமூக விரோ​தி​களை​யும் வைத்து திமுக செய்த சூழ்ச்​சி​யால்​தான் அது தாமத​மானது. அடுத்த வாரம் முதல் விஜய்​யின் சுற்​றுப்​பயணம் தொடங்​கப் ​போகிறது. என்​ன சூழ்ச்​சி செய்​தா​லும்​ அவரை தடுக்​க முடி​யாது’’ என்​றார்​.

SCROLL FOR NEXT