தமிழகம்

விருதுநகரில் அமைச்சர் கீர்த்தனாவின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த எம்எல்ஏக்கள்

இ.மணிகண்டன்

விருதுநகரில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை மாவட்டத்தின் 6 எம்எல்ஏக்கள் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தவெக வேட்பாளர் கீர்த்தனா அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். நேற்று முன்தினம் விருதுநகர் வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் சுகபுத்ரா உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி மற்றும் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். துறை வாரியாக ஒவ் வொரு அதிகாரியும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டப் பணிகளை விளக்கினர்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வித் துறையில் விருதுநகரை முதன்மை மாவட்டமாக மாற்ற செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பாராட்டுக்குரியவை.

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 10 மாணவர்களுக்கு ஒரு பொறுப்பு அலுவலரை நியமித்து, அவர்களை தேர்ச்சி பெற வைக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் சிறப்பு நடவடிக்கை தொடர வேண்டும். பொது சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்பு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை வரிமை அளிக்க வேண்டும். நவீன விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

முன்னதாக, இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் வென்ற தவெக எம்எல்ஏக்களுக்கும், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர் ஆகிய தொகுதி களில் வென்ற திமுக எம்எல்ஏக் களுக்கும் அமைச்சர் அலுவ லகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நேற்று நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் தவெக எம்எல்ஏக்கள் உட்பட மாவட்டத்தில் உள்ள எந்தவொரு எம்எல்ஏவும் பங்கேற்கவில்லை. தவெக மாவட்டச் செய லாளரும் விருதுநகர் தொகுதி எம்எல்ஏவுமான செல்வம் நேற்று முன்தினம் அமைச்சர் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT