தமிழகம்

அன்பில் மகேஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கை எதிர்த்த தவெக எம்எல்ஏ மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: தனது வெற்​றியை எதிர்த்து முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்​கக் கோரி திரு​வெறும்​பூர் தவெக எம்​எல்ஏ நவல்​பட்டு விஜி தாக்​கல் செய்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

திருச்சி திரு​வெறும்​பூர் தொகுதி​யில் போட்​டி​யிட்ட திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில்​மகேஸ் 81,132 வாக்​கு​கள் பெற்​றிருந்​தார். அவரை எதிர்த்​துப் ​போட்​டி​யிட்ட தவெக வேட்​பாளர் நவல்​பட்டு விஜி என்ற விஜயகுமார் 89,837 வாக்​கு​கள் பெற்று 8,705 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார்.

இந்​நிலை​யில் நவல்​பட்டு விஜி தேர்​தலில் வெற்றி பெற்​றது செல்​லாது என அறி​விக்கக்​கோரி அன்​பில் மகேஸ் உயர்நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி கே. குமரேஷ்பாபு முன்​பாக நிலுவை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில் தனக்கு எதிராக அன்பில் மகேஸ் தொடர்ந்த தேர்​தல் வழக்கை தொடக்க நிலையிலேயே நிராகரிக்​கக் ​கோரி நவல்​பட்டு விஜி சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இதனை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, தேர்தல் பிரசாரத்தின்போது குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது.

தவெக எம்எல்ஏ மீதான இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை விசாரணைக்கு பிறகே முடிவு செய்ய முடியும் என்று கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், அன்பில் மகேஸின் தேர்தல் வழக்கில் 4 வார காலத்​துக்​குள் பதிலளிக்குமாறு எம்​எல்ஏ நவல்​பட்டு விஜிக்கு உத்​தர​விட்டு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT