தவெக எம்எல்ஏ முஸ்தபா
கோப்புப் படம்
மதுரை: “தவெக வெற்றி பெற்று நல்லாட்சி தருவதைக் கெடுக்க திமுகவும், அதிமுகவும் முயற்சி செய்கின்றன. திமுகவும் அதிமுகவும் மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றன. என்னையே தொடர்பு கொண்டு, ‘நீங்கள் முதலில் 15 கோடி ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள், தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது நீங்கள் அரசுக்கு எதிராக வாக்களித்த பின்னர் 15 கோடி ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்’ எனப் பேரம் பேசினர்,” என்று தவெக எம்எல்ஏ முஸ்தபா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தவெக வெற்றி பெற்று நல்லாட்சி தருவதைக் கெடுக்க திமுகவும், அதிமுகவும் முயற்சி செய்கின்றன. திமுகவும் அதிமுகவும் மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றன. என்னையே தொடர்புகொண்டு, ‘நீங்கள் முதலில் 15 கோடி ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள், தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது நீங்கள் அரசுக்கு எதிராக வாக்களித்த பின்னர் 15 கோடி ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள்’ எனப் பேரம் பேசினர்.
இது குறித்து தலைமையிடம் நான் கூறியுள்ளேன். இந்த பேரத்தில் அதிமுகவினர் ஈடுபடுகின்றனர். மதுரையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி என்னை தொடர்பு கொண்டார். தவெக ஆட்சியை கெடுப்பதற்கு எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர். மக்கள் இதைப் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
தவெக எம்எல்ஏக்கள் ரூ.100 கோடி கொடுத்தாலும் வரமாட்டார்கள். இந்த குதிரைபேர விவகாரத்தில் திமுக, அதிமுக சேர்ந்துதான் ஈடுபட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் இதை யார் செய்தார்கள் என்று வெளிவரும்.
தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதால் ஆர்.பி உதயகுமார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாகப் பேசுகிறார்.
35 கட்சிகள் கூட்டணியுடன் திமுக தேர்தலை சந்தித்தது. அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை. யாருடனும் கூட்டணி வைக்காமல் தவெக 35 சதவீத வாக்குகளை பெற்று வரலாறு படைத்து ஆட்சியைப் பிடித்துள்ளோம். இதனிடையே, இடைத்தேர்தலிலும் தவெகவுக்கு மக்கள் வெற்றியை அளித்துள்ளனர்.
சீமான் இரட்டை வேடம் போடுவார். பொது வேட்பாளராக சீமான் நின்றால், திமுகவும் அதிமுகவும் ஆதரிக்கத் தயாராக இருக்கின்றன. ஆனால், சீமான் மக்கள் மன்றத்தில் தோல்வியை தழுவியவர்.” என்று எம்எல்ஏ முஸ்தபா கூறினார்.