தமிழகம்

ஹெச்.ராஜாவின் காரை வழிமறித்து தவெகவினர் கடும் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: ​பாஜக தேசிய செயற்​குழு உறுப்​பினர் ஹெச்​.​ராஜா. இவர், சென்​னை​யில் இருந்து விழுப்​புரம் நோக்கி காரில் நேற்று வந்​தார். அதே திசை​யில் செங்​கல்​பட்​டைச் சேர்ந்த வழக்​கறிஞர் சசிக்​கு​மார் என்​பவரும் வந்​துள்​ளார்.

இவர், பாஜக​வில் இருந்து விலகி தவெகவில் இணைந்​துள்​ளார். ஏற்​கெனவே பாஜக​வில் இருந்​த​தால் ஹெச்​.​ராஜாவுக்கு சசிக்​கு​மார் அறி​முக​மானவர். இதன் அடிப்​படை​யில் விழுப்​புரம் மாவட்ட எல்​லை​யான ஓங்​கூர் அருகே உள்ள ஆத்​தூர் சுங்​க​ச்சாவடி​யில் இரு​வரது கார்​களும் ஒன்​றாக வந்​த​போது, கார்​களை நிறுத்தி இரு​வரும் பேசத் தொடங்கி இருக்​கின்​றனர்.

அப்​போது, பாஜக​வில் இருந்​த​போது மத்​திய அரசின் வழக்​கறிஞர் பதவியை பெற்​றுக் கொண்டு தவெக​வில் இணைந்​து​விட்​டது குறித்து ஹெச்​.​ராஜா கேள்வி எழுப்​பிய​தாக தெரி​கிறது.

இதற்கு ஆட்​சேபம் தெரி​வித்த வழக்​கறிஞர் சசிக்​கு​மார், மத்​திய அரசின் வழக்​கறிஞர் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​ட​தாக கூற, “ராஜி​னாமா செய்​து​விட்ட பிறகு ‘ஜி’ என்ற அரசு முத்​திரையை ஏன் காரில் பயன்​படுத்தி இருக்​கிறீர்​கள்? மேலும் ‘ஜி’ என்ற வாசகத்​துடன் காரில் தவெக கொடியை ஏன் பறக்க விட்​டுள்​ளீர்​கள்?” என ஹெச்​.​ராஜா கேட்​ட​தாக கூறப்​படு​கிறது.

பின்​னர், ஆத்​தூர் சுங்​கச்​சாவடி பகு​தி​யில் இருந்து ஹெச்​.​ராஜா புறப்​பட்டு வந்​துள்​ளார். அவரது காரை, தவெக கட்​சியை சேர்ந்த வழக்​கறிஞர் சசிக்​கு​மாரின் கார் விரட்டி இருக்​கிறது.

சுமார் 12 கி.மீ. தொலை​வுக்கு விரட்டி வந்​து, ஒலக்​கூர் அடுத்த மேல்​பேட்​டை​யில் வழிமறித்​துள்​ளனர். மேலும் கார் முன்பு உட்​கார்ந்து மறியலில் ஈடு​பட்​டனர்.

போலீ​ஸார் சமாதானம்

அப்​போது ஹெச்​.​ராஜாவுடன் வழக்​கறிஞர் சசிக்​கு​மார் தரப்​பினர் கடும் வாக்​கு​வாதம் செய்​துள்​ளனர். இதையறிந்த உள்​ளூர் தவெக​வினரும் இணைந்​து, தங்​கள் கட்சி தலை​வருக்கு எதி​ராக பேசிய கருத்​துகள் குறித்து கேள்வி எழுப்​பினர்.

இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்​சாலை​யில் சிறிது நேரம் போக்​கு​வரத்து பா​தித்​தது. ஒலக்​கூர் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு சென்று இரு தரப்​பினரை​யும் சமா​தானப்​படுத்​தி அனுப்​பி வைத்​தனர்​.

SCROLL FOR NEXT