சரவணகுமார்

 
தமிழகம்

நகை கொள்ளை வழக்கில் கைதான தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

இ.மணிகண்டன்

விருதுநகர்: நகை கொள்ளை வழக்கில் கைதான தவெக நிர்வாகி கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பெண்ணை கட்டிப்போட்டு 21 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விருதுநகர் மாவட்ட தவெக இளைஞரணி இணை அமைப்பாளர் சரவணகுமார் உள்ளிட்ட 3 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தவெகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒழுங்கு, கட்டுப்பாடு மற்றும் நலனுக்கு முரணான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டதாக பெறப்பட்ட தகவல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் சரவணகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்.

அவர் தவெக பெயரையோ, கொடியையோ, சின்னத்தையோ அல்லது கட்சியின் எந்த ஒரு பொறுப்பையும் பயன்படுத்தி செயல்படக்கூடாது.

கட்சியின் எந்த நிகழ்வுகளிலும் அல்லது அமைப்பு நடவடிக்கைகளையும் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT