கோப்புப் படம்

 
தமிழகம்

மாமல்லபுரத்தில் தவெக சார்பில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஏற்பாடு - விஜய் பங்கேற்கிறார்

செய்திப்பிரிவு

மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் தவெக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடத்த ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இந்த விழா நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை கட்சியினர் தவிர்த்தனர்.

இந்த நிலையில், கிறஸ்துமஸ் விழாவை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதில் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையே, கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளுடன் விஜய், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

SCROLL FOR NEXT