சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தையடுத்து, அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோக்கள், பேரணிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, தமிழக அரசு கடந்த ஜன.5 அன்று அரசிதழில் வெளியிட்டது.
அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மற்றும் அங்கீகாரம் பெறாத கட்சிகள் என பாரபட்சமாக நிறை வேற்றப்பட்டுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என தவெக இணைப் பொதுச் செயலாளரான சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்தனர்.