திருமாவளவன் |கோப்புப் படம்

 
தமிழகம்

“தவெக அரசு நான் சொல்வதை கேட்கிறது என்பது கட்டுக்கதை” - திருமாவளவன் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: ​நான் சொல்​வதை தவெக அரசு கேட்​கிறது என்​பது உள்​ளிட்ட பல கட்​டுக்​கதைகளை பரப்​பு​கின்​றனர் என விசிக தலை​வர் திரு​மாவளவன் கூறி​னார்.

மதுரை​யில் நேற்று நடந்த கட்​சி​யின் மண்டல செயற்​குழு கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: தமிழர்​களை ஒருங்​கிணைக்​க​வி​டா​மல் சாதி​கள் தடுக்​கின்​றன. பிற கட்​சியி​லிருந்து வில​கு​வோர் விசிக​வில் சேரு​வ​தில்​லை. நாம் தமிழர், தேமு​தி​க​வில் இருந்து வில​கு​வோர் கூட அதி​முக, திமுக​வுக்​குச் செல்​கின்​றனர். சாதிய, மதவா​தி​கள் விசிகவை தனிமைப்​படுத்த துடிக்​கின்​றன. தற்​போது தவெக அமைச்​சர​வை​யில் ஒடுக்​கப்​பட்ட சமூகத்​தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்​சர் பதவி, ஒரு​வருக்கு துணை சபா​நாயகர் பதவி என 9 பேருக்கு முதல்​வர் விஜய் வாய்ப்பு கொடுத்​துள்​ள​தாக சமூக ஊடங்​களில் பரப்​பு​கின்​றனர்.

வெறுப்பை ஏற்படுத்த முயற்சி: இதன்மூலம் பிற சமூக மக்​களிடம் தவெக அரசுக்கு எதி​ராக வெறுப்பை ஏற்​படுத்​தும் வித​மாக திட்​ட​மிட்டு கருத்​துகளை திணிக்​கின்​றனர். 20 ஆண்​டு​கள் திமுக கூட்​ட​ணி​யில் தொடர்ந்து பயணித்த நிலை​யில் அங்கே பெரி​தாக நாங்​கள் எது​வும் சாதிக்​க​வில்​லை. தவெக அரசில் திருமாவளவனுக்கு வரவேற்பு கொடுக்​கப்​படு​கிறது. நான் சொல்லி ஒரு அதி​காரிக்குபதவி வழங்​கப்​படு​கிறது. அவர் சொன்​னால் அரசு கேட்​கிறது என்​றெல்​லாம் பலர் பரப்புகின்றனர். அவர்கள் சொல்​வது எல்லாம் கட்​டுக்​கதைகள். நான் சொல்லி ஒரு போலீஸ் அதி​காரிக்கு பதவி கொடுத்​திருந்​தால், அவரை ஏன் அப்​ப​த​வியி​லிருந்து மாற்​றி​னார்​கள்? இவ்​வாறு அவர் பேசி​னார்.

அதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் மேலும் அவர் கூறியதாவது: நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில், தொகுதி மறு​வரையறை மசோ​தா, பெண்​களுக்​கான இட ஒதுக்​கீடு மசோ​தாவை மத்​திய பாஜக அரசு நிறைவேற்ற இருப்​ப​தாக தெரி​கிறது. இந்த விவ​காரத்​தில் இண்​டியா கூட்​ட​ணி​யின் நிலைப்​பாட்​டையொட்டி, தொகுதி மறு​வரையறை மசோ​தாவை எதிர்ப்​போம். நாகர்​கோ​வில் சிறை​யில் சபரிவர்​மன் உயி​ரிழந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்ற முதல்​வர் நடவடிக்கை எடுக்க வேண்​டும். பழநி கோயில் நிலமோசடி விவ​காரத்​தில் முதல்வர் கவனம்​ செலுத்​த வேண்​டும்​. இவ்​வாறு கூறினார்​.

SCROLL FOR NEXT