தீ வைத்து எரிக்கப்பட்ட தவெக தேர்தல் பணிமனை.

 
தமிழகம்

திருச்சி அருகே தவெக தேர்தல் பணிமனைக்கு தீவைப்பு

செய்திப்பிரிவு

திருச்சி: ​திருச்சி அருகே பேட்​டை​வாய்த்​தலை​யில் தவெக தேர்​தல் பணிமனையை பெட்​ரோல் ஊற்றி தீ வைத்த நபர்​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். திருச்சி மாவட்​டம் பேட்​டை​வாய்த்​தலையை சேர்ந்​தவர் வீர சிவா. தவெக விவ​சாய அணி மாவட்ட செய​லா​ள​ராக உள்​ளார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி ஸ்ரீரங்​கம் தொகுதி தவெக வேட்​பாள​ருக்​காக வீட்​டின் முன்பு தேர்​தல் பணிமனை அமைத்திருந்​தார். இந்​நிலை​யில் நேற்று அதி​காலை இந்த தேர்​தல் பணிமனை தீ வைத்து எரிக்​கப்​பட்​டிருந்​ததுடன், அங்கு வைக்​கப்​பட்​டிருந்த தவெக விளம்பர பதாகைகளும் கிழிக்​கப்​பட்​டிருந்​தன.

இதுகுறித்து வீர சிவா கொடுத்த புகாரின்​பேரில் பேட்​டை​வாய்த்​தலை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்​தனர். மேலும், அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்​த​போது, இருசக்கர வாக​னத்​தில் வந்த 2 பேர், தாங்​கள் கொண்டு வந்த பாட்​டிலில் இருந்த பெட்​ரோலை ஊற்றி தேர்​தல் பணிமனைக்கு தீ வைத்​ததுடன், அங்​கிருந்த தவெக பதாகைகளை​யும் கிழித்​தெறிந்​து​விட்டு அங்​கிருந்து தப்​பிச் செல்​வது தெரிய​வந்​தது.

அதனடிப்​படை​யில் இரு​வரை​யும் போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீரங்​கம் தொகுதி தவெக வேட்​பாளர் ரமேஷ், தனது எக்ஸ் வலைதள பக்​கத்​தில் பதி​விட்​டுள்​ளது: பேட்​டை​வாய்த்​தலை பகு​தி​யில் செயல்​பட்டு வந்த எனது தேர்​தல் அலு​வல​கம் மர்ம நபர்​களால் தீயிட்டு அழிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், வாக்கு எண்​ணும் மையத்​தில் எனக்​கும், கட்சி நிர்​வாகி​களுக்​கும் எதி​ராக வன்​முறை செயல்​களை அரங்​கேற்ற எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிடு​வ​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளது. இந்த பிரச்​சினை​யில் தேர்​தல் ஆணை​யம் தலை​யிட்​டு, வாக்கு எண்​ணும் மையத்​தில் கூடு​தல் பாது​காப்பு வழங்​க வேண்​டும்​ என தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT