தமிழகம்

தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாக வசதிக்காகப் புதிதாக நான்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி, 128 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டுள்ளன.

          

அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, கூடுதலாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 4 மாவட்டங்களுக்கு, விதிகளின்படி மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு தென்கிழக்கு - மோகன்ராஜா, செங்கல்பட்டு மத்தி - தியாகராஜன், செங்கல்பட்டு கிழக்கு - தினகரன், செங்கல்பட்டு தெற்கு- பாலாஜி ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள்." இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு இணைச் செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணைச் செயலாளர்கள் மற்றும் நான்கு செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT