சென்னை: விசிக, ஐயூஎம்எல் ஆதரவால் தவெகவின் பலம் 120 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், முதல்வராக விஜய் பதவியேற்கிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 10 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெறுவது அவசியமானது. இதனால், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார். முதல்கட்டமாக, 5 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்தது. பின்னர், பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளும் நேற்று முன்தினம் அறிவித்தன. இதன்மூலம் தவெகவின் பலம் 116 ஆக அதிகரித்தது. ஆனால், தவெகவுக்கு ஆதரவு இல்லை என்று ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார். விசிகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
விசிக நேற்று மாலை ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. ஐயூஎம்எல் கட்சியும், கடைசி நேரத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து கடிதம் வழங்கியது.அதன்படி, தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 120 இடங்கள் கிடைத்தன.
இந்நிலையில், மாலை 6.15 மணிக்கு விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, விஜய் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ஏற்கெனவே அங்கு வந்து காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1.45 மணி நேரம் நடந்தது.
அப்போது, 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் வழங்கினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக எம்எல்ஏ வன்னியரசு, மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார், ஐயூஎம்எல் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழகத்தின் 18-வது முதல்வராக விஜய் பதவியேற்கிறார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
தவெக தரப்பில் செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல்குமார், அருண்ராஜ், வெங்கடரமணன், காங்கிரஸ் தரப்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு: சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை (11-ம் தேதி) பதவியேற்கின்றனர். தற்காலிக சபாநாயகர் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 13-ம் தேதிக்குள் சட்டப் பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என விஜய்க்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார்.
ஆதரவு கிடைப்பதில் இருந்த சிக்கல்கள் நீங்கி, விஜய் பதவியேற்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதால், தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்
துள்ளனர். மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
ரஷீத் சுழலில் சுருண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்: புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது குஜராத்சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை (11-ம் தேதி) பதவியேற்கின்றனர். தற்காலிக சபாநாயகர் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 13-ம் தேதிக்குள் சட்டப் பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என விஜய்க்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார்.
ஆதரவு கிடைப்பதில் இருந்த சிக்கல்கள் நீங்கி, விஜய் பதவியேற்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதால், தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.