தவெக தலைவர் விஜய்

 
தமிழகம்

நாளை தவெக வேட்பாளர்கள் அறிமுகம்

செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை விஜய் சென்னையில் இன்று அறிமுகம் செய்வதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் செய்யப்பட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைக்காததால் அந்த நிகழ்வும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தவெக மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம், வரும் 29-ம் தேதி காலை 11 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற உள்ளது.

          

இதில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் விஜய் கலந்து கொண்டு தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 சட்டப்பேரவை தொகுதிகள் ஆகியவற்றுக்கான வெற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT