முகமது நசீஃப், நவுஃபல்

 
தமிழகம்

போதைப்பொருள் விற்பனையில் கூட்டணி: திமுக, தவெக நிர்வாகிகள் கைது

செய்திப்பிரிவு

கூடலுார்: போதைப்​பொருள் கடத்​தி​ய​தாக திமுக, தவெக நிர்​வாகி​களை கேரள போலீ​ஸார் கைது செய்​தனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்​டம் வைத்​திரி பகுதி​யில் போதைப்​பொருள் தடுப்​புப் பிரி​வினர் நேற்று முன்​தினம் இரவு வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது, அவ்​வழி​யாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்​ததில் ரூ.7 லட்​சம் மதிப்​புள்ள 8 கிராம் எம்​டிஎம்ஏ போதைப்​பொருள் மறைத்து வைத்​திருந்​தது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டது.

விசா​ரணை​யில், காரில் வந்​தவர்​கள் நீல​கிரி மாவட்​டம் கூடலூரைச் சேர்ந்த திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்​பாளர் நவுஃபல் (45), அதே பகுதி​யைச் சேர்ந்த தவெக நீல​கிரி மாவட்ட மேற்கு மண்​டல இணைச் செய​லா​ளர் முகமது நசீஃப் (48) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து போலீ​ஸார் போதைப்​பொருளை பறி​முதல் செய்து, இரு​வர் மீதும் வழக்​குப்​ப​திந்து கைது செய்​தனர். தொடர்ந்து வயநாடு காவல்​துறை​யினர் விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

கைதான இரு​வரும் இணைந்து தவெக கட்​சிக் கொடி கட்​டப்​பட்ட காரைப் பயன்​படுத்தி போதைப்​பொருள் விற்​பனை​யில் ஈடு​பட்​டுள்​ளது விசா​ரணை​யில் உறுதி​யாகி​யுள்​ளது. தமிழகத்​தில் 135 கிலோ மெத்​தம்​பெட்​டமைன் பறி​முதல் செய்​யப்​பட்ட சம்​பவத்​தில் முன்​னாள் தவெக நிர்​வாகி​யான பூபாலன் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், நீல​கிரி மாவட்​டம் கூடலூரை சேர்ந்த திமுக, தவெக நிர்​வாகி​களுக்கு தொடர்பு உள்​ளதா எனவும் விசா​ரணை நடந்து வரு​கிறது.

இது தொடர்​பாக தமிழ்​நாடு காவல்​துறையும் விசா​ரிக்​கும் என போலீ​ஸார் தெரி​வித்​தனர். போதைப்​பொருள் விற்​பனை செய்த தவெக, திமுக நிர்​வாகி​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளது பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT