டிடிவி தினகரன்

 
தமிழகம்

“நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் மகிழ்ச்சி” - டிடிவி தினகரன் தகவல்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திரைப் பிரபலங்​கள் அரசி​யல் கட்​சிகளில் இணைவது இயல்​பான ஒன்​றுதான். நடிகர் தனுஷ் அதிமுக​வில் இணைந்​தால் மகிழ்ச்சி என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

விடுதலைப் போராட்ட வீரர்​கள் மருது சகோ​தரர்​கள் நினைவு தினத்​தை​யொட்டி சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரில் அவர்​களது மணிமண்​டபத்​தில் உள்ள சிலைகளுக்கு டி.டி.வி.தினகரன் நேற்று மாலை அணி​வித்து மரியாதை செலுத்​தினார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: விவசாயிகள், தூய்​மைப் பணி​யாளர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பினரும் போராட்​டத்​தில் ஈடு​படு​கின்​றனர். தவெக நிர்​வாகி​கள் சிலரே போதைப்​பொருள் விற்​பனை​யிலும் சமூக​விரோதச் செயல்​களி​லும் ஈடு​படு​கின்​றனர்.

இதுபோன்ற விஷயங்​களில் அரசு நட​வடிக்கை எடுத்து வரு​வ​தாக கூறினாலும் தமிழகத்​தின் நிலை கவலைக்​கிட​மாக இருக்​கிறது. தமிழகத்​துக்கு சாபக்​கேடான தவெக ஆட்சி விரைவில் வீழும். தூய்​மையான ஆட்​சியை வழங்​கு​வ​தாகக் கூறி அதி​காரத்​துக்கு வந்​தனர். தற்​போது அனைத்​துத் துறைகளி​லும் ஊழல் நிறைந்​துள்​ளது.

பழனிசாமி தலை​மையில், மீண்​டும் ஜெயலலிதா ஆட்​சியை அமைக்க நாங்​கள் அனைவரும் ஓரணி​யில் திரண்​டுள்​ளோம். வேலுமணி, சி.வி.சண்​முகம், நத்​தம் விஸ்வநாதன் உள்​ளிட்​டோர் தங்​களது கருத்​துகளை பொது​வெளி​யில் பேசுவதை தவிர்த்​து​விட்டு, கட்​சித் தலை​மையுடன் பேச வேண்​டும்.

திரைப் பிரபலங்​கள் அரசி​யல் கட்​சிகளில் இணைவது இயல்​பான ஒன்​றுதான். நடிகர் தனுஷ் அதிமுக​வில் இணைந்​தால் மகிழ்ச்சி. பழனிசாமியோடு இணைந்து திரு​மாவளவனை முதல்​வ​ராக்க முயற்​சித்​தோம்.

பாஜக கூட்​ட​ணி​யில் அதிமுக இருப்​ப​தால், பழனிசாமியை முதல்​வ​ராக கம்​யூனிஸ்ட்​கள் ஏற்​க​வில்லை. திமுக ஆதரவை கேட்க நாங்​கள் முயற்​சிக்​க​வில்லை. அதேநேரத்​தில், ஒரு​வேளை தவெக ஆட்சி அமைக்​கா​விட்​டால், பழனிசாமியை முதல்​வ​ராக்க தவெக​விடம் ஆதரவு கேட்​கும் திட்​டத்​திலும் இருந்​தோம்.

திமுகவும் அதிமுகவும் ஒருபோதும் இணைந்து செயல்​பட முடி​யாது. இரு கட்​சிகளும் இணைவ​தாகக் கூறி விஜய் அரசி​யல் ஆதாயம் தேட முயற்​சிக்​கிறார். அவரது அரசி​யல் முகம் வெளிப்​படத் தொடங்​கி​யுள்​ளது. இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT