டிடிவி தினகரன்|கோப்புப் படம்

 
தமிழகம்

“அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக மத்தியஸ்தம் தேவை” - தினகரன் வரவேற்பு

செய்திப்பிரிவு

திருப்பூரில் அமமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், பங்கேற்றவர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: செங்கோட்டையன் போன்ற நீண்ட அனுபவம் கொண்ட அரசியல்வாதிகள், தவெகவில் சேர்கிறார்கள் என்றால் அந்தந்த கட்சிகள் தங்களை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். சில கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் எங்களுடன் பேசி வருகின்றனர். உறுதியான முடிவு எடுத்த பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

அதிமுக ஒன்றாக இருந்தால்தான் அடுத்த நூற்றாண்டுக்கும் கட்சியை கொண்டு செல்ல முடியும். தேர்தல் முடிவுக்கு பிறகாவது, அதிமுகவில் மீண்டும் இணைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கிறேன். பதவி ஆசைக்காகவும், சுய லாபத்திற்காகவும் பிளவு ஏற்படுத்தியவர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும். அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்றுதான் பாஜக தலைலவர்கள் முயற்சி செய்தார்கள். இப்போதும் செய்கிறார்கள். ஒரு கட்சியில் நிலவும் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை.

பாஜக மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் தவறாகப் பார்க்கவில்லை. திமுக, அதிமுகவை அடுத்து விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய உள்ளதாக எனக்கு செய்திகள் வருகிறது. நான் யாருடன் செல்கிறேன் என இதுவரை முடிவு எடுக்கவில்லை. இறுதி வடிவம் அடைந்த பிறகு உறுதியாக தெரிவிக்கிறேன். எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை. நட்பு ரீதியாக பேசி உடன்பாடு எட்டப்படும் என்றார்.

SCROLL FOR NEXT