டிடிவி தினகரன்

 
தமிழகம்

தமிழக முன்னேற்றத்துக்கான எந்த திட்டமும் தவெகவிடம் இல்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தென்காசி: தமிழ்​நாட்​டுக்கு தேவை​யான எந்த திட்​ட​மும் தவெக அரசிடம் இல்லை என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி ​தினகரன் கருத்து தெரி​வித்​துள்​ளார்

தென்​காசி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: விவ​சாய சங்​கத்​தினரிடம் ஆலோ​சனை செய்த பின்​னர் மேட்​டூர் அணையை திறப்​பது குறித்து முதல்​வர் முடிவு செய்​திருக்க வேண்​டும். தொடர்ந்​து, 30 நாட்​கள் தண்​ணீர் வந்​தால்​தான் விவ​சா​யம் செய்ய முடி​யும். இப்​போது தண்​ணீர் திறந்து விடு​வ​தால் எந்த விதத்​தி​லும் விவ​சா​யிகளுக்கு பயனளிக்​காது.

ரீல்​ஸ்​களுக்கு வேண்​டு​மா​னால் பயன்​படும். விஜய் ஒவ்​வொரு நாளும் வீட்​டில் இருந்து வெளியே வந்​து, வீட்​டுக்கு திரும்​பிச் செல்​வது வரை திரைப்பட சூட்​டிங் போலத்​தான் நடந்​து​கொண்டு இருக்​கிறார். சினிமா கவர்ச்​சி​யால் விஜய் ஆட்​சிக்கு வந்​துள்​ளார். அவர்​களிடம் எந்தத் திட்​ட​மும் இல்​லை. தமிழ் மொழியைக்​கூட அமைச்​சர்​களால் சரி​யாக பேச முடிய​வில்​லை. முதல்​வரும் கையில் எழுதி வைத்து பார்த்துபடிப்​பதை தவறாக படிக்​கிறார்.

தமிழும் வரவில்​லை, கணக்​கும் தெரி​யாமல் தடு​மாறுகிறார். பொங்​கலுக்கு வழங்​கும் 8 முழம் வேட்​டியை 4 முழ​மாக மாற்​றி​விட்​டனர். இவருக்கு வாக்​களித்​தவர்​கள் அனைத்​தை​யும் உணரத் தொடங்​கி​விட்​டனர். விஜய் பிரதமர் வேட்​பாள​ராம். ஆட்சி அதி​காரத்​துக்கு ஆசைப்​பட்​டு, திமுகவை விட்டு விலகி தவெக​வுக்கு ஆதரவு அளித்​தது காங்​கிரஸ். இப்​போது ராகுல் காந்தி பிரதமர் வேட்​பாளர் என்​பதை கேலிக்​கூத்​தாக்​கும் அளவுக்​கு, விஜய்யை பிரதமர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​துகின்​றனர்.

தமிழ்​நாட்​டுக்கு எப்​போதெல்​லாம் தீங்கு நடக்​கிறதோ, அதற்​கெல்​லாம் காங்​கிரஸ் காரண​மாக இருந்​துள்​ளது. 60 ஆண்​டு​களாக ஆட்​சி​யில் இல்​லாத கோபத்​தில் தவெக-வுக்கு ஆதரவு அளித்​து, காங்​கிரஸார் தங்​கள் தலை​யிலேயே கொள்​ளிக்​கட்​டை​யால் சொறிந்​து​ கொண்டிருக்​கிறார்​கள். ராகுல் காந்​திக்கு மாணிக்​கம் தாகூரும், பிர​வீன் சக்​கர​வர்த்​தி​யும் பதில் சொல்ல வேண்​டிய நிலை வரும். தமிழ்​நாட்​டில் மீண்​டும் அதி​முக தலை​மை​யில் ஆட்சி அமை​யும். இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT