தமிழகம்

அதிமுகவும், அமமுகவும் வேறு அல்ல; எப்போதும் ஒரு தொண்டனாக அதிமுகவுடன் நிற்பேன்: டிடிவி தினகரன் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவும், அமமுக​வும் வேறு அல்ல, எப்​போதும் ஒரு தொண்​ட​னாக அதி​முக​வுடன் நிற்​பேன் என அமமுக பொதுச்​ செய​லா​ளர் டிடிவி தினகரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தூய சக்தி என்று கூறி வெற்றி பெற்ற தவெக, பெரும்​பான்மை கிடைக்​காத நிலை​யில் என்​னென்ன குறுக்கு வழிகளை முயற்சி செய்து ஆட்சி அமைத்​தார்​கள் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும்.

இன்​றைக்கு முதல்​வரும், அவரது அமைச்​சர்களும் தினம் தினம் சினிமா கதைகளை போல் ரீல் விட்​டுக் கொண்​டிருக்​கின்​றனர்.

தனது எம்​எல்​ஏக்​களை தக்​க​வைத்​துக் கொள்​ள​வும், எதிர்க்​கட்சி எம்​எல்​ஏக்​கள் தங்​களை தாக்கி பேசுவதை தடுக்க வேண்​டும் என்​ப​தற்​காக​வும் கார் கொடுப்​ப​தாக கூறி, ஊரான் வீட்டு நெய்​யில் ஸ்வீட் செய்து கொண்​டிருக்​கிறார் முதல்​வர்.

என்​னை​யும், சசிகலா​வை​யும் அதி​முக​வில் மீண்​டும் சேர்க்க வேண்​டும் என முன்​னாள் அமைச்​சர்​கள் பலரும் பழனி​சாமிக்கு கடிதம் எழு​தி​யுள்​ளனர். அவர்​களது விருப்​பம் நியாய​மானது​தான்.

ஆனால், பழனி​சாமி மீது குறைசொல்​வதை காட்​டிலும், கட்​சியை மீண்​டும் ஆட்​சிக்கு கொண்​டு​ வரு​வதற்கு என்ன செய்ய வேண்​டுமோ, அதை உள்​ளிருந்து அவரோடு பேசி அதை சரிசெய்ய வேண்​டும்.

அமமுக​வும், அதி​முக​வும் வேறு அல்ல. இரண்​டுமே மறைந்த முதல்​வர் ஜெயலலி​தா​வின் கட்​சிகள்​தான். நான் இப்​போதும் அதி​முக​வுடன்​தான் நிற்​கிறேன். எப்​போதும் அதி​முக​வுடன் ஒரு தொண்​ட​னாக உறு​துணை​யாக நிற்​பேன்.

மீண்​டும் ஜெயலலி​தா​வின் ஆட்சி மலர வேண்​டும். பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் தொடர்ந்து நாங்​கள் பயணிப்​போம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT