தமிழகம்

அரசு பேருந்தில் ‘தமிழ்நாடு’ என அச்சிட கோரி வழக்கு: போக்குவரத்து துறை பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: அரசு பேருந்​துகளில் ‘தமிழ்நாடு அரசு போக்​கு​வரத்து கழகம்’ என குறிப்​பிடக்​கோரிய வழக்​கில் போக்​கு​வரத்​துறை முதன்​மைச் செய​லா​ளர் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தூத்​துக்​குடியைச் சேர்ந்த செல்​வகு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு சொந்​த​மான பேருந்​துகளில் இது​வரை ‘தமிழ்நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகம்’ என அச்​சிடப்​பட்​டிருந்​தது.

தற்​போது தமிழ்நாடு என்ற வார்த்தை நீக்​கப்​பட்​டு, ‘அரசு போக்​கு​வரத்​துக் கழகம்’ என மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால் முன்​பிருந்​தது போல் அரசு பேருந்​துகளில் தமிழ்நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகம் என குறிப்​பிடக்​கோரி அதி​காரி​களுக்கு மனு அனுப்​பினேன். நடவடிக்கை எடுக்​க​வில்​லை.

அரசு பேருந்​துகளில் பெயர் மாற்​றம் செய்​ததற்​காக தமிழக போக்​கு​வரத்து துறை​யின் முதன்​மைச் செயலர், தமிழ் வளர்ச்​சித் துறை​யின் முதன்​மைச் செயலர், தமிழ்நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தின் தலைமை மேலா​ளர் ஆகியோரிட​மிருந்து ரூ.10 கோடி அபராதம் வசூலிக்​க​வும், அரசு பேருந்​துகளில் தமிழ்நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகம் என முழு​மை​யாக அச்​சிடப்​பட்​டிருப்​பதை உறுதி செய்​ய​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராம கிருஷ்ணன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், தமிழ்நாடு என்ற வார்த்தை இல்​லாமல் இருப்​பது தொடர்​பாக போக்​கு​வரத்து கழகத்​திடம் கேள்வி எழுப்​பியதற்​கு, அந்த வார்த்​தையை எழுத இடம் போத​வில்லை என்​ப​தா​லும், சிறிய எழுத்​துக்​களில் குறிப்​பிட்​டால் பெயர் தெரி​யாமல் போகும் என்​ப​தா​லும் தமிழ்நாடு என குறிப்​பிடப்​பட​வில்லை என பதில் அளிக்​கப்​பட்​டது.

இந்த காரணம் ஏற்​கும்​படி​யாக இல்லை என்​றார். இதையடுத்து நீதிப​தி​கள், மனு தொடர்​பாக தமிழக போக்​கு​வரத்து துறை முதன்​மைச் செய​லா​ளர் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை 2 வாரங்​களுக்கு தள்​ளி​வைத்​தனர்​.

SCROLL FOR NEXT