தமிழகம்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்: சாலையில் அணிவகுக்கும் வாகனங்களால் பாதியிலேயே திரும்பும் சுற்றுலா பயணிகள்

செய்திப்பிரிவு

பழநி: கொடைக்​கானலில் கோடை சீசன் தொடங்​கிய நிலை​யில், போக்​கு​வரத்து நெரிசலை கட்​டுப்​படுத்​தும் வித​மாக, 2024 மே 7-ம் தேதி முதல் கொடைக்​கானலுக்கு சுற்​றுலா பயணி​கள் செல்ல ‘இ-​பாஸ்’ நடை​முறை அமலில் உள்​ளது. இருந்​தும், ஆண்​டு​தோறும் அனுபவிக்​கும் சிரமங்​கள் இந்த ஆண்​டும் தொடர்​வ​தாக சுற்​றுலா பயணி​கள் வேதனை தெரிவிக்​கின்​றனர்.

கோடை சீசன் தொடங்​கிய நிலை​யில் கொடைக்​கானலில் விடு​முறை நாட்​கள் மட்​டுமின்​றி, வார நாட்​களி​லும் போக்​கு​வரத்து நெரிசல் அதி​கரித்து வரு​கிறது. இதனால் சுற்​றுலாப் பயணி​கள் அரைகுறை​யாக சுற்​றுலா இடங்​களை பார்த்​து​விட்டு பாதியிலேயே திரும்​பும் நிலை உள்ளது.

கொடைக்​கானல் நகராட்சி சார்​பில் பேருந்து நிலை​யம் மற்​றும் ரோஜா பூங்கா அரு​கில் தற்காலிக வாகன நிறுத்த இடம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த இடம் போது​மான​தாக இல்​லாத​தால் சாலை​யோரம் வாக​னங்​களை நிறுத்தி செல்​கின்​றனர். இது​வும் போக்​கு​வரத்து நெரிசலுக்கு முக்​கியக் காரணம். இது த​விர, சுற்​றுலா இடங்​களில் போது​மான கழிப்​பறை​கள், குடிநீர் வசதி செய்து தரப்​பட​வில்​லை.

மேலும், சீசனை முன்​னிட்டு திண்​டுக்​கல், தேனி மாவட்ட போலீஸாரை தற்​காலிக பணி​யாக கொடைக்​கானலுக்கு அனுப்பி வைத்து போக்​கு​வரத்தை சீர் செய்ய மாவட்ட காவல்​துறை நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT