தமிழகம்

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை

செய்திப்பிரிவு

செங்​கல்​பட்டு: தமிழக முதலமைச்​சரும் தமிழக வெற்​றிக் கழக தலை​வரு​மான விஜய் மற்​றும் அவரது மனைவி சங்​கீதா இடையே​யான விவாகரத்து வழக்​கு, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​தில் இன்று (ஜூன் 15) விசா​ரணைக்கு வரு​கிறது.

சங்​கீ​தா, கடந்த 2025 டிசம்​பர் 24-ம் தேதி செங்​கல்​பட்டு மாவட்ட நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில், தமக்கு விவாகரத்து வழங்​க​வும், நிரந்தர ஜீவ​னாம்​சம் வழங்​க​வும் கோரி​யிருந்​தார்.

இந்த மனு கடந்த பிப்​ர​வரி 26-ம் தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, வழக்கை செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றி நீதி​மன்​றம் உத்​தர​ விட்​டது.

தொடர்ந்​து, கடந்த ஏப்​ரல் 20-ம் தேதி விசா​ரணைக்கு வந்த இந்த வழக்கு மேலும் ஒத்​திவைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், வழக்கு இன்று மீண்​டும் விசா​ரணைக்கு வர உள்​ளது.

இந்த விசா​ரணை​யில் விஜய் காணொலி காட்சி (ஆன்​லைன்) வாயி​லாக ஆஜராக நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இந்த வழக்​கின் அடுத்​தகட்டம் குறித்து அரசி​யல் மற்​றும் பொது​மக்​கள் மத்​தி​யில்​ எதிர்​பார்ப்​பு நில​வு​கிறது.

SCROLL FOR NEXT