தமிழகம்

மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி வருகை

பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை

செய்திப்பிரிவு

திருச்சி: மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா இன்று (பிப்​.13) இரவு திருச்சி வரு​கிறார். திருச்சியில் இன்று இரவு நடை​பெறும் மையக் ​குழுக் கூட்​டத்​தில் பாஜக முக்​கிய நிர்​வாகி​களு​டன் தொகு​திப் பங்​கீடு, தேர்​தல் பிர​ச்சார யுக்​தி​கள் மற்றும் வியூ​கங்​கள் குறித்து அவர் ஆலோ​சனை மேற்​கொள்​கிறார்.

டெல்​லி​யில் இருந்து இன்று மாலை தனி விமானத்​தில் புறப்​பட்​டு, இரவு 9 மணிக்கு திருச்சி விமான நிலை​யம் வரும் அமித் ஷா, அங்​கிருந்து கார் மூலம் ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கே​யுள்ள தனி​யார் ஹோட்​டலில் தங்​கு​கிறார்.

          

பின்​னர், அங்கு இரவு 10 மணிக்கு நடை​பெறும் மையக்​குழுக் கூட்​டத்​தில் பாஜக முக்​கிய நிர்​வாகி​களு​டன் தமிழக அரசி​யல் நில​வரம், தொகு​திப் பங்​கீடு, தேர்​தல் பிரச்​சார யுக்​தி​கள் உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து கலந்​துரை​யாடு​கிறார். மேலும், தேமு​தி​கவை கூட்​ட​ணிக்​குள் கொண்டு வரு​வது குறித்து இறுதி முடிவு எடுக்க இருப்​ப​தாக​வும் தெரி​கிறது.

இந்​தக் கூட்​டத்​தில், மத்​திய அமைச்​சரும், தமிழக தேர்​தல் பொறுப்​பாள​ருமான பியூஷ் கோயல், மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமிழக மேலிடப் பார்​வை​யாளர்​கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்​றும் முன்​னாள் தலை​வர்​கள் பொன்​.​ரா​தாகிருஷ்ணன், அண்​ணா​மலை, தமிழிசை, வானதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

காரைக்கால் செல்கிறார்... பின்​னர், நாளை காலை 10.30 மணிக்கு காரில் விமான நிலை​யம் செல்​லும் அமித் ஷா,அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் காரைக்​கால் செல்​கிறார். அங்கு நடை​பெறும் பாஜக பொதுக் கூட்​டத்​தில் பங்​கேற்​கும் அவர், பின்​னர் புதுச்​சேரி மாநில பூத் கமிட்டி நிர்​வாகிகளு​டன், தேர்​தல் பணிகள் குறித்து ஆலோ​சனை நடத்​துகிறார்.

பின்​னர் அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் திருச்சி விமான நிலை​யம் வரும் அமித்​ஷா, தனி விமானம் மூலம் டெல்லி புறப்​பட்​டுச் செல்​கிறார். இதையொட்டி திருச்சி மாநகரப் பகு​தி​களில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. திருச்சி விமான நிலை ​யம் மற்​றும் தனியார் ஹோட்​டலில் பாது​காப்​புத் துறை ஒருங்​கிணைப்​புக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

SCROLL FOR NEXT