தமிழகம்

பல்லடத்தில் இன்று திமுக மகளிரணி மேற்கு மண்டல மாநாடு: முதல்வர் வருகையையொட்டி 2,200 போலீஸார் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

கோவை / திருப்பூர்: ​தி​முக மகளிரணி மேற்கு மண்டல மாநாடு திருப்​பூர் மாவட்​டம் பல்​லடத்​தில் இன்று (டிச. 29) நடை​பெறுகிறது. இதில், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்​வர் உதயநிதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர். இதையொட்​டி, 2,200-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட உள்​ளனர்.

பல்​லடம் அரு​கே​யுள்ள காரணம்​பேட்​டை​யில் ‘வெல்​லும் தமிழ் பெண்​கள்’ என்ற தலைப்​பில் நடை​பெறும் திமுக மகளிரணி மாநாட்​டில் மேற்கு மண்டல மாவட்​டங்​களைச் சேர்ந்த 1.50 லட்​சம் பெண்​கள் கலந்து கொள்​கின்​றனர்.

மேலும், முதல்​வர் ஸ்டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஆகியோர் சிறப்​புரை​யாற்​றுகின்​றனர். இதில் பங்​கேற்​ப​தற்​காக முதல்​வர் ஸ்டா​லின் இன்று காலை 11 மணிக்கு சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் கோவை வரு​கிறார். விமான நிலை​யத்​தில் அவருக்கு கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் உற்​சாக வரவேற்பு அளிக்​கின்​றனர்.

அங்​கிருந்து சின்​னி​யம்​பாளை​யத்​தில் உள்ள நட்​சத்​திர ஹோட்​டலில் சிறிது நேரம் ஓய்​வெடுக்​கும் முதல்​வர், மாலை 4 மணிக்கு கார் மூலம் பல்​லடம் செல்​கிறார். மாநாடு முடிந்த பின்​னர் இரவு கோவை விமான நிலை​யத்​துக்கு வந்​து, சென்​னைக்​குப் புறப்​பட்​டுச் செல்​கிறார்.

இதே​போல, துணை முதல்​வர் உதயநிதி இன்று மதி​யம் 1 மணிக்கு கோவை வந்​து, அங்​கிருந்து பல்​லடம் செல்​கிறார். மாநாடு முடிந்த பின்​னர் கோவை சின்​னி​யம்​பாளை​யத்​தில் உள்ள நட்​சத்​திர ஹோட்​டலில் தங்​கும் அவர், நாளை ஆர்​.எஸ்​.புரத்​தில் கட்​டப்​பட்​டுள்ள மாநக​ராட்சி ஹாக்கி மைதானத்தை திறந்து வைக்​கிறார்.

பின்​னர், கோவையி​லிருந்து ஈரோட்​டுக்​குப் புறப்​பட்​டுச் செல்​கிறார். முதல்​வர், துணை முதல்​வர் வரு​கை​யையொட்டி கோவை மாநகர காவல் ஆணை​யர் ஆ.சர​வணசுந்​தர், எஸ்​.பி. கார்த்​தி​கேயன் தலை​மை​யில் 1,000 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படு​கின்​றனர்.

இதே​போல, திருப்​பூர் மாவட்​டம் பல்​லடத்​தில் மாநாடு நடக்​கும் இடத்​தில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்​தில்​கு​மார் தலை​மை​யில் 1,200 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்​.

13 வகை​யான உணவுகள்... திமுக துணைப் பொதுச் செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி. தலை​மை​யில் நடை​பெறும் மாநாட்​டில், அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், சு.​முத்​து​சாமி, கயல்​விழி செல்​வ​ராஜ், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோர் பேசுகின்​றனர்.

மகளிர் மாநாட்​டில் பங்​கேற்​கும் அனை​வருக்​கும் 13 வகை​யான உணவு வகைகளுடன் மதிய விருந்து வழங்​கப்​படு​கிறது. மாநாட்​டின் நிறை​வாக தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​படு​கின்​றன.

SCROLL FOR NEXT