தமிழகம்

தமிழகத்தில் பரவலாக நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: லட்சத்தீவில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: லட்சத்தீவு பகுதிகளின் மேல் சுமார் 1 கி.மீ. உயரத்தில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (23-ம் தேதி) டெல்டா, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழையும், பரவலாக பல மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 27-ம் தேதி வரை பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT