தமிழகம்

நீர்நிலைகளில் 20% வரை நீர் அளவை குறைக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள நீர்த்​ தேக்​கங்​கள், ஏரி​களின் முழு கொள்​ளள​வில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை நீர் அளவை குறைத்து வைக்​கு​மாறு பொறி​யாளர்​களுக்கு அமைச்​சர் துரை​முரு​கன் உத்​தர​விட்​டார்.

தமிழகம் முழு​வதும் நீர்​நிலைகளில் தற்​போதைய நீர் இருப்பு நில​வரம், பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள், தற்​போது மழை​யால் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் குறித்து அனைத்து மண்டல தலை​மைப் பொறி​யாளர்​களுடன் அமைச்சர் துரை​முரு​கன் நேற்று காணொலி மூலம் ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

நெல்​லை, தென்​காசி மாவட்​டங்​களில் நீர்த்​தேக்​கங்​கள் நிரம்​பி​யுள்​ளன. தாமிரபரணி​யில் ஏற்​கெனவே வெள்​ளப்பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. எனவே, எதிர்​வரும் மழைப்​பொழிவை எதிர்​கொள்ள தயா​ராக வேண்​டும்.

பெரு வெள்​ளம் ஏற்​பட்டால், நிலை​மையை துரித​மாக சமாளிக்​க​வும் கண்​காணிக்​க​வும் பணி​களை போர்க்​கால அடிப்​படை​யில் மேற்​கொள்​ள​வும் ஏது​வாக நெல்​லை, தூத்​துக்​குடி, கன்​னி​யாகுமரி, டெல்டா மாவட்​டங்​களுக்கு தனித்​தனி குழுக்​களை ஏற்​படுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தமிழகம் முழு​வதும் உள்ள நீர்​நிலைகளின் நீர் இருப்​பில் முழு கொள்​ளள​வில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை குறைத்து, நீர்​நிலைகளைப் பாதுகாக்க வேண்​டும். எதிர்​பா​ராத வகை​யில் நீர்​நிலைகளில் உடைப்பு ஏற்​பட்​டால், போர்க்கால அடிப்​படை​யில் சீரமைக்க தயார்நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT