புளியரை அருகே கேரளத்​துக்கு கனிமவளங்களை கொண்​டு​செல்​வதற்காக அணிவகுத்து நிற்​கும் லாரி​கள்.

 
தமிழகம்

மாற்றுப் பாதையில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் தமிழக கனிம வளங்கள்

ஆட்சி மாறினாலும் அரசு விதிகளுக்கு கட்டுப்படாத குவாரிகள், லாரிகளால் பாதிப்பு

த.அசோக்குமார், எல்.மோகன்

தென்காசி / நாகர்கோவில்: கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் விதிக்​கப்​பட்ட தடை​யால், மாற்றுப்பாதையில் தின​மும் ஆயிரக்​கணக்​கான லாரி​கள் கேரளா​வுக்கு விதி​களை மீறி கனிமவளங்​களைச் கொண்டு செல் கின்​றன.

கேரள எல்​லை​யில் உள்ள தென்​காசி மாவட்​டத்​தில், 50-க்​கும் மேற்​பட்ட கல்​கு​வாரி​கள் உள்​ளன. இவற்​றில் இருந்து எம்​.சாண்ட், ஜல்​லி, கட்​டு​மான கற்​கள் தகர்த்து எடுக்​கப்​பட்​டு, தின​மும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட லாரி​களில் கேரளத்​துக்கு கொண்டு செல்​லப்​படு​கின்​றன. இதையடுத்து கனிமவளங்​கள் கொண்​டு​செல்ல கடந்த ஆட்​சியில் தடை விதிக்​கப்​பட்​டது.

இதற்கு எதி​ராக இந்​தியன் டிரைவர்ஸ் சொசைட்டி தொடர்ந்த வழக்​கில், தமிழக அரசின் உத்​தர​வுக்கு உயர் நீதி​மன்ற மதுரை கிளை தடை விதித்து உத்​தர​விட்​டது. தற்​போது, குவாரி​களில் அளவைத் தாண்டி கனிம வளங்​களை சூறை​யாடு​வது, அதிக சக்தி கொண்ட வெடி வைப்​பது,லாரி​களில் அதிக பாரம் ஏற்​றிச்செல்​வது, போக்​கு​வரத்து நெரிசல், விபத்​துகளில் உயி​ரிழப்​பு​கள் போன்றவை அதி​கரித்​துள்​ளன.

இதன்தொடர்ச்சியாக தென்​காசி புளியரை​யில் வட்​டார போக்​கு​வரத்து துறை மற்​றும் காவல் துறை சோதனைச்​சாவடிகளை இணைத்​து, தென்​காசி ஆட்​சி​யர் ரஞ்​ஜீத் சிங் உத்​தர​விட்​டார். இதுகுறித்​து, முன்​னாள் எம்​எல்ஏ ரவி அருணன் கூறும்போது, அரசின் ஒவ்​வொரு துறை​யும் கையூட்டு பெற்​றுக்​கொண்டு உடந்​தை​யாக செயல்​படு​வ​தால் தங்​குதடை​யின்றி கனிமவளங்​கள் கொண்டு செல்​லப்​படு​கின்​றன என்றார்.

களியக்​கா​விளை சோதனைச்​சாவடி வழி​யாக ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட லாரி​கள் கனிமவளத்​துடன் கேரளா​வுக்​குச் சென்​றன. விபத்​துகள் அதி​கரித்​தன. இதை கட்​டுப்​படுத்த குமரி எஸ்பி ஸ்டா​லின் நடவடிக்கை மேற்​கொண்​டார். குமரி​யில் நான்​கு​வழிச்​சாலை பணி முடிந்த பின்​னரே கனிமவள லாரி​களை அனு​ம​திப்​பது குறித்து யோசிக்​கலாம் என அப்​போதைய ஆட்​சி​யர் அழகு மீ​னா உத்​தர​விட்​டார்.

இதனால், மாற்றுப் பாதையாக புளியரை வழி​யாக லாரி​கள்கேரளா​வுக்குச் செல்​கின்​றன. மேலும், கன்​னி​யாகுமரி - கேரளாசெல்​லும் தேசிய நெடுஞ்​சாலை​யைத் தவிர்த்​து, கொல்​லங்​கோடு, கோழிப்​போர் விளை,ஊரம்​பு, களியல் போன்ற குறுக்கு சாலை வழி​யாக கனிமவள லாரி​கள் கேரளா​வுக்​குச் செல்​கின்​றன. இதுகுறித்​து, குமரி கனிமவளத் துறை அதி​காரி​கள் கூறும்​போது, “நாற்கர சாலைப் பணி​களுக்​கும், உள்​ளூர் தேவைக்​கும் மட்​டுமே அனு​ம​திச்​சீட்டு வழங்​கப்​படு​கிறது” என்​றனர்.

SCROLL FOR NEXT