தமிழகம்

இருமொழிக் கொள்கைக்கு எதிராக அதிகாரிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: இருமொழிக் கொள்​கைக்கு எதி​ராக செயல்​படும் அதி​காரி​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என தமிழக அரசு எச்​சரித்​துள்​ளது.

தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளத்​தில் இருந்து நாசரேத் செல்​லும் மாநில நெடுஞ்​சாலை​யில் (எஸ்​எச்​-93) இரு தினங்​களுக்கு முன்பு புதிய வழி​காட்டி பலகை அமைக்​கப்​பட்​டது.

இதில், திருநெல்​வேலி, ஆழ்​வார்​திருநகரி, தூத்​துக்​குடி, திருச்​செந்​தூர் ஆகிய ஊர்​களுக்கு எத்​தனை கிலோ மீட்​டர், எந்த திசை​யில் செல்ல வேண்​டும் என்​பதை குறிக்​கும் வகை​யில் பெயர்​கள் எழுதப்​பட்​டிருந்​தன.

முதலில் தமிழ் மொழி​யிலும், அடுத்​த​தாக இந்தி மொழி​யிலும், மூன்​றாவ​தாக ஆங்​கில மொழி​யிலும் ஊர்​களின் பெயர்​கள் எழுதப்​பட்​டிருந்​தன. வழி​காட்டு பலகை​யில் இந்தி மொழி இடம் பெற்​றிருந்​தது பெரும் சர்ச்​சையை கிளப்​பியது.

இந்த வழி​காட்டி பலகை சமூக வலை​தளங்​களில் வைரலாகப் பரவியது. திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், பாமக தலை​வர் அன்​புமணி உள்​ளிட்ட தலை​வர்​களும் தமிழ் ஆர்​வலர்​களும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, அந்த வழி​காட்டு பலகை​யில் இருந்த இந்தி பெயர்​கள் நேற்று முன்​தினம் இரவில் அவசர, அவசர​மாக ஸ்டிக்​கர் ஒட்டி மறைக்​கப்​பட்​டன.

இதுதொடர்​பாக, மாநில நெடுஞ்​சாலைத்​துறை உதவிக் கோட்ட பொறி​யாளர் பூமி​நாதன், உதவிப் பொறி​யாளர் முத்​துலட்​சுமி ஆகி​யோர் உடனடி​யாக தற்​காலிக பணிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இச்​சம்​பவம் தொடர்​பாக, தமிழக அரசு சார்​பில் வெளி​யிட்ட அறிக்​கை​: சாத்​தான்​குளம் - நாசரேத் மாநில நெடுஞ்​சாலை​யில் (எஸ்​எச்​-93) புதி​தாக வைக்​கப்​பட்ட வழி​காட்​டிப் பலகை​யில் தமிழ் மற்​றும் ஆங்​கிலத்​துடன், இந்தி மொழி​யிலும் ஊர்ப் பெயர்​கள் எழுதப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தவுடன் இந்தி எழுத்​து​கள் உடனடி​யாக நீக்​கப்​பட்​டன.

தமிழக அரசின் இரு​மொழிக் கொள்​கைக்கு எதி​ராக மாநில நெடுஞ்​சாலைத் துறை​யின் வழி​காட்​டிப் பலகை​யில் இந்தி இடம்​ பெற காரண​மாக இருந்த நெடுஞ்​சாலைத்​துறை உதவிக் கோட்ட பொறி​யாளர் மற்​றும் உதவிப் பொறி​யாளர் ஆகி​யோர் உடனடி​யாக தற்​காலிகப் பணிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

துறைரீ​தி​யான நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட்டு வரு​கிறது. தமிழக அரசின் இரு​மொழிக் கொள்​கைக்​கு எதி​ராக செயல்​படும்​ அரசு அலு​வலர்​கள் மீது கடுமை​யான நடவடிக்​கை​கள் எடுக்​கப்​படும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT