தமிழகம்

பதிவுத் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: மாதிரி பதிவு மையங்கள் குறித்து தமிழக அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் அமைய​வுள்ள மாதிரி பதிவு மையங்​களின் கட்​டமைப்பு வசதி​களை மட்​டுமே தனியார் நிறு​வனங்​கள் நிர்​வகிக்​கும். ஆவணப் பதிவுக்​கான சட்​டப்​பூர்வ அதி​காரம் பதிவுத்​துறை​யிடமே இருக்​கும் என்று தமிழக அரசு விளக்​கம் அளித்​துள்​ளது.

இது​குறித்து பதிவுத்​துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தமிழகத்​தில் ஆவணப்​ப​திவு, திரு​மணப் பதிவுச் சேவை​களை எளிமைப்​படுத்தி துரித​மாக வழங்க மாநிலம் முழு​வதும் 25 மாதிரி பதிவு மையங்​கள் அமைக்​கப்​பட உள்​ளன.

நடப்பு (2026–27) நிதி ஆண்​டில் முதல்​கட்​ட​மாக ரூ.7.84 கோடி​யில் சென்னை வடக்கு, மத்​திய சென்னை, சென்னை தெற்கு, செங்​கல்​பட்டு, கோவை வடக்கு ஆகிய 5 பதிவு மாவட்​டங்​களில் இந்த மையங்​களை அமைக்க அனுமதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதேநேரம், இது பதிவுத்​துறை​யின் சட்​டப்​பூர்​வப் பொறுப்​பு​களை தனியார்​மய​மாக்​கும் திட்​டம் இல்லை. தற்​போது சார்​ப​திவாளர்​கள் ஆவணங்​களை சட்​டப்​படி பரிசீலித்து பதிவு செய்​வதுடன், மக்​களுக்​கான உதவி, அடிப்​படை வசதி​கள் பராமரிப்பு உள்​ளிட்ட முகப்பு நிர்​வாகப் பணிகளை​யும் சேர்த்​துக் கவனிக்க வேண்​டியுள்​ளது.

இப்​பணிகளை பிரித்து சார்​ப​திவாளர்​கள் சட்​டரீதி​யான ஆவணப் பரிசீலனை​யில் முழு​மையாக கவனம் செலுத்​தும் வகை​யிலேயே மாதிரி பதிவு மையங்​கள் உரு​வாக்​கப்​படு​கின்​றன.

இந்த மையங்​களின் கட்​டமைப்பு, தினசரி செயல்​பாடுகள், பராமரிப்​புப் பணிகள் மட்​டுமே டெண்​டர் மூலம் தேர்வு செய்​யப்​படும் தனியார் சேவை வழங்​குநரிடம் 5 ஆண்​டுகளுக்கு ஒப்​படைக்​கப்​படும்.

ஆவணங்​களை பரிசீலித்து பதிவு செய்​வதற்​கான சட்​டப்​பூர்வ அதி​காரம் சார்​ப​திவாளர்​களிடம் மட்​டுமே இருக்​கும். ஆவண எழுத்​தர் மற்​றும் தற்​போதைய பதிவு நடைமுறைகளில் எவ்​வித மாற்​றமுமில்லை.

தற்​போது சொத்து அமைந்​துள்ள பகுதி​யின் சார்​ப​திவாளர் அலு​வல​கத்​தில் மட்​டுமே பதிவுசெய்ய முடியும். புதிய மாதிரி மையங்​களில், ஒரே பதிவு மாவட்​டத்​துக்​குள் வசதி​யான மையத்​தில் பதிவுச்​சேவை பெறலாம்.

​மக்​கள் விருப்​பத்​துக்கு ஏற்ப சாதா​ரண சேவைக்கு ரூ.2 ஆயிரம், தட்​கல் அல்​லது பிரீமியம் சேவைக்கு ரூ.5 ஆயிரம், தட்​கல் பிரீமியம் சேவைக்கு ரூ.10,000 என கட்​ட​ணங்​கள் நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளன.

ஆவணங்​கள் குறித்த அதி​காரப்​பூர்வ தரவு​கள் பிரத்​யேக சாப்ட்​வேர் மூலமாக பராமரிக்​கப்​படும். 5 மையங்​களின் செயல்​பாடுகள் மதிப்​பீடு செய்​யப்​பட்ட பின்​னர், மேலும் 20 மையங்​கள் தமிழகத்​தின் பிற பகுதி​களில் விரிவுபடுத்​தப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டு உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT