தமிழகம்

விமான எரிபொருள் மீதான வாட் வரி குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் விமான எரி பொருள் மீதான வாட் வரியை அரசு கணிச​மாக குறைத்​துள்ளது.

இது​குறித்து வணிகவரித் துறை சார்​பில் வெளி​யிடப்​பட்ட அரசிதழ் அறி​விக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: தமிழ்​நாடு மதிப்​புக் கூட்டு வரிச் சட்​டத்​தின்​படி விமான எரிபொருள் மீதான மதிப்​புக்​கூட்டு வரி (வாட்) தற்​போது குறைக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, சென்னை விமான நிலை​யத்​தில் திட்​ட​மிடப்​பட்ட விமான சேவை நிறு​வனங்​களுக்கு எண்​ணெய் நிறு​வனங்​கள் விற்​பனை செய்​யும் எரிபொருள் (ஜெட் எரிபொருள் உட்​பட) மீதான வரி 29 சதவீதத்​தில் இருந்து 16 சதவீத​மாகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது.

சென்​னையைத் தவிர, மாநிலத்​தில் உள்ள பிற விமான நிலை​யங்​களில் விமானங்​களுக்கு நிரப்​பப்​படும் எரிபொருள் வரி 29 சதவீதத்​தில் இருந்து 1 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வரிக் குறைப்பு 2026 நவ.1 முதல் 2027 அக்.31-ம் தேதி வரை ஓராண்டு நடைமுறை​யில் இருக்​கும். வரிச் சலுகையைப் பெற, எரிபொருள் விற்​பனை செய்​யும் நிறு​வனம், அதை வாங்​கும் விமான நிறு​வனம் பூர்த்தி செய்து கையொப்​பமிட்ட உறுதி​மொழி படிவத்தை தங்​கள் மாதாந்​திர வரிக் கணக்​குடன் சம்​பந்​தப்​பட்ட மதிப்​பீட்டு அலு​வலரிடம் சமர்ப்​பிக்க வேண்​டும்.

இந்த படிவம் ஒவ்​வொரு மாதமும் அளிக்​கப்​பட வேண்​டும். வாங்​கப்​பட்ட எரிபொருள் உள்​நாட்டு விமானப் பயன்​பாட்​டுக்​கானது என்​ப​தையும் அதில் விமான நிறு​வனம் உறுதிசெய்ய வேண்​டும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT