தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் |கோப்புப் படம்

 
தமிழகம்

“தமிழக அரசின் நிதி நிலைமை மிகச் சிறப்பாக உள்ளது” - நிதியமைச்சர் மரியவில்சன் தகவல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: தமிழக அரசின் நிதி நிலைமை மிகச் சிறப்​பாக உள்​ள​தாக நிதி அமைச்​சர் மரிய​வில்​சன் தெரி​வித்​தார்.

திருநெல்​வேலி மாவட்​டத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை முன்​னேற்​பாடு பணிகள் குறித்து அமைச்​சர் மரிய​வில்​சன் ஆய்வு மேற்​கொண்​டார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் மீது பல்​வேறு வழக்​கு​கள் நிலுவை​யில் உள்​ளன. அவரைப் பற்றி தற்​போது பல வீடியோக்​கள் வெளியாகி வரு​கின்​றன.

பள்​ளிக் கல்​வித்​துறை​யில் மட்​டும் ரூ.150 கோடிக்​குமேல் ஊழல் நடை​பெற்​றுள்​ளது. முக்​கிய​மான கல்​வித் துறை​யிலேயே ஊழல் செய்​யக்​கூடிய​வர்​கள் திமுக​வினர் என்​பது, அன்​பில் மகேஸ் விவகாரம் மூலம் தெளிவாக தெரிய​வந்​துள்​ளது.

தமிழக அரசின் நிதி நிலைமை மிகச்​சிறப்​பாக உள்​ளது. முந்​தைய ஆட்​சி​யைப்​போல் அல்​லாமல், திட்​டங்​களில் ஊழலின்றி வெளிப்​படைத் தன்​மையுடன் நிதி கையாளப்​படு​கிறது. நடப்பு நிதி​யாண்​டில் கடன் வாங்​கு​வது 21 சதவீதம் குறைக்​கப்​பட்​டுள்​ளது. கடன் பத்​திரங்​கள் மூலம் ரூ.40,500 கோடி திரட்​டப்​பட்​டுள்​ளது. இது கடந்த ஆண்​டை​விட குறைவாகும். மூலதனச் செல​வினத்தை பொறுத்​தவரை, தேர்​தல் நடத்தை விதி​களால் 2 மாதங்​கள் பணிகள் பாதிக்​கப்​பட்ட போதிலும், நடப்பு ஆண்​டில் இது​வரை ரூ.12,346 கோடி செல​விடப்​பட்டு ஆக்​கப்​பூர்​வ​மான பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT