சென்னை: பொதுப் பணித் துறை செயலர் உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் எம்.சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு: பொதுப் பணித் துறை செயலர் சுஞ்சோங்கம் ஜடக் சிரு இப்போது நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த ஆர்.செல்வராஜ் இப்போது பொதுப் பணித் துறை செயலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தொழில் துறை சிறப்புச் செயலர் சந்தீப் நந்தூரி இப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலராகவும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் பி.உமாமகேஷ்வரி இப்போது கைத்தறித் துறை இயக்குநராகவும், பேரூராட்சிகள் துறை முன்னாள் இயக்குநர் எம்.பிரதீப்குமார், இப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறை துணை செயலர் பி.அழகுமீனா இப்போது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராகவும், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் ஆர்.சுரேஷ்குமார் இப்போது தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அதிகாரியாகவும், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சித்ரா விஜயன் இப்போது சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதிப்பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.