மின்சார பேருந்து | கோப்புப்படம்

 
தமிழகம்

500 மின்சார பேருந்து டெண்டர் ரத்து: தமிழக அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​துக்கு 500 மின்​சார பேருந்​துகள் கொள்​முதல் செய்​வதற்​கான டெண்​டரை அரசு ரத்து செய்துள்​ளது.

தமிழகத்​தில் 2025 முதல் மின்​சார பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்த மின்​சார பேருந்​துகளை ஒப்​பந்த நிறு​வனமே கொள்​முதல் செய்​து, இயக்கி பராமரிக்​கும். அதற்​கான குறிப்​பிட்ட தொகையை ஒப்​பந்த நிறு​வனத்​துக்கு அரசு வழங்​கும்.

அதன்பின், சென்​னை, மதுரை, கோவை​யில் பயன்​படுத்த 500 மின்​சார பேருந்​துகள் கொள்​முதல் செய்ய டெண்​டர் கோரப்​பட்​டது. இந்​தப் பேருந்​துகள் ஜெர்​மனி வங்கி நிதி​யுத​விடன் வாங்க திட்​ட​மிடப்​பட்​டது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதைய சூழலில் பேருந்துகளைப் போக்குவரத்துக் கழகங்கள் கொள்முதல் செய்து இயக்குவது நிதி இழப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து ஜெர்மனி வங்கியிடம் தெரிவிக்கப்பட்டு, தற்போதுள்ள நடைமுறையை பின்பற்ற கோரிக்கை கடிதம் அனுப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஜூன் 18-ம் தேதி டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜெர்மன் வங்கியும் ஒப்புதல் அளித்தது. இதன் காரணமாகவே டெண்டர் ரத்து செய்யப்பட்டது. விரைவில் டெண்டரில் திருத்தம் செய்து மீண்டும் வெளியிடப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT