தமிழகம்

மேகேதாட்டு விவகாரம்: டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற விவசாயிகளை நடுவழியில் கைது செய்வதா? - தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: மேகே​தாட்​டு​வில் அணை கட்ட முயற்​சிக்​கும் கர்​நாடக அரசை கண்​டித்து டெல்​லி​யில் போராட்​டம் நடத்​தச் சென்ற தமிழக விவ​சா​யிகளை கைது செய்​திருப்​ப​தற்கு, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் மாநிலப் பொதுச்​செய​லா​ளர் சாமி.நட​ராஜன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தின் ஜீவா​தா​ர​மாக உள்ள காவிரி நதிநீர் பிரச்​சினை​யில் உச்ச நீதி​மன்ற இறு​தித் தீர்ப்பு அடிப்​படை​யில், தமிழகத்​துக்கு கர்​நாடக அரசு தண்​ணீர் திறப்​ப​தில்​லை.

இதன் காரண​மாக, காவிரி டெல்டா மாவட்​டங்​களில் பாசனம் முற்​றி​லும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனிடையே, காவிரி நீர் ஆதா​ரத்தை மேலும் பாதிக்​கும் வகை​யில் மேகே​தாட்​டு​வில் காவிரி​யின் குறுக்கே புதிய அணை கட்ட முயற்​சிக்​கும் கர்​நாடக அரசை கண்​டித்து தமிழகத்​தில் பல விவ​சாய சங்​கங்​கள் போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன.

இதன் ஒருபகு​தி​யாக ஐக்​கிய விவ​சா​யிகள் சங்​கத்​தின் தலை​வர் சங்​கரய்யா தலை​மை​யில் டெல்​லி​யில் போராட்​டம் நடத்​து​வதற்​காக சென்​னை​யில் இருந்து டெல்​லிக்கு சென்​றவர்​களை நாக்​பூரில் ரயி​லிருந்து கீழே இறக்கி கைது செய்​துள்​ளனர்.

இது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. அரசி​யல் சட்​டம் வழங்​கி​யுள்ள ஜனநாயக ரீதி​யாக போராடும் உரிமையை பறிக்​கும் வகை​யில் கைது செய்​யப்​பட்​டுள்ள விவ​சா​யிகளை உடனடி​யாக விடு​வித்து அவர்​கள் டெல்லி செல்​வதற்கு உரிய ஏற்​பாடு​களை மத்​திய அரசு மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்​ளார்.

SCROLL FOR NEXT