தாம்பரம் தொகுதியில் ஸ்ட்ராங் ரூம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை வட்டாட்சியர் நடராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 
தமிழகம்

வாக்குப் பதிவு இயந்திரங்களை வைக்க ஸ்ட்ராங் ரூம் அமைக்கும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்க நல்லூர் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், முதல்கட்ட சரிபார்ப்பு முடிந்து, மறைமலை நகர் நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 20 சதவீத கூடுதல் இருப்புடன் 3,070 கன்ட் ரோல் யூனிட்; 3,684 பேலட் யூனிட்: 30 சதவீதம் கூடுதல் இருப்புடன், 3,991 வி.வி.பேட் உள்ளன.

வாக்குப் பதிவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பிரதானமாக உள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள், அந்தந்த சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் நடத் தும் அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற் காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்பு மார்ச் 24-ல் மாவட்ட ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, வாகனங்களில் ஏற்றப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும், ஸ்ட் ராங் ரூம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

          

மாவட்ட ஸ்ட்ராங் ரூமில் இருந்து எடுக்கப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில், அந்தந்த தொகுதிக்கான ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரான பின், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புதிய பேட்டரி பொருத்தப்படும். பேலட் யூனிட்டில், வேட்பாளரின் சின்னம், கலர் போட் டோ. பெயர் விவரங்களுடன் கூடிய பேலட் ஷீட் பொருத்தப் பட்டு தயார்படுத்தப்படும். தேர்தலுக்கு முந்தைய நாளில், அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாம்பரம் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியிலும், பல்லாவரம் வேல்ஸ் கல்லூரி, சோழிங்க நல்லூர் - துரைப்பாக்கம் செயின் கல்லூரி, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதி வட்டாட்சியர் அலுவலகம், செங்கல்பட்டுக் கான இயந்திரங்கள் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்படும்.

SCROLL FOR NEXT