நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு. படம்: அ.ஷேக்முகைதீன்

 
தமிழகம்

பிப்​.17-ல் இடைக்கால பட்ஜெட்: பேரவைத் தலைவர் அப்பாவு தகவல்

செய்திப்பிரிவு

சென்னை/ திருநெல்வேலி: தமிழக அரசின் 2026-27-ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்​ஜெட் பிப்​.17-ம் தேதி தாக்​கல் செய்​யப்பட உள்​ள​தாக பேர​வைத் தலை​வர் அப்​பாவு அறி​வித்​துள்​ளார்.

தமிழக அரசின் அடுத்த நிதி ஆண்​டுக்​கான பட்​ஜெட் வழக்​க​மாக பிப்​ர​வரி மாதம் தாக்​கல் செய்​யப்​படும். கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்​த​தில் இருந்​து, பொது பட்​ஜெட், வேளாண் பட்​ஜெட் ஆகியவை அடுத்​தடுத்த நாட்​களில் தாக்​கல் செய்​யப்​படு​கின்​றன.

          

தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தல் விரை​வில் நடை​பெற உள்​ளது. இதனால், தற்​போதைய அரசு இடைக்​கால பட்​ஜெட்டை மட்​டுமே தாக்​கல் செய்​யும். அந்த வகை​யில், பிப்​ர​வரி 3-வது வாரத்​தில் பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​படலாம் என்று தகவல் வெளி​யானது.

இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு நேற்று திருநெல்​வேலி மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: சட்​டப்​பேரவை கூட்​டத் தொடர் பிப்​.17-ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள சட்​டப்​பேரவை மண்​டபத்​தில் கூடு​கிறது. அன்று 2026-27-ம் ஆண்​டுக்​கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதி அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தாக்​கல் செய்​கிறார்.

20-ம் தேதி 2026-27-ம் ஆண்​டுக்​கான முன்பண மானியக் கோரிக்​கை​யும், 2025-26-ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானியக் கோரிக்​கை​யும் தாக்​கல் செய்​யப்​படு​கின்​றன. சட்​டப்​பேர​வையை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது என்று 17-ம் தேதி நடை​பெறும் அலு​வல் ஆய்​வுக் குழு கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​படும்.

​பேரவை நிகழ்​வு​கள் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​படு​கின்​றன. உலகெங்​கிலும் இருந்து யார் வேண்​டு​மா​னாலும் இணை​யதளம் மூலம் பார்க்க முடி​யும். அமைச்​சரின் பதில் உரைகள், மானியக் கோரிக்​கைகள், சிறப்பு தீர்​மானங்​கள் போன்​றவை நேரலை செய்​யப்​படு​கின்​றன. விவாதங்​களை முழு​மை​யாக நேரலை செய்​வது குறித்து அலு​வல் ஆய்​வுக் குழு முடிவு செய்​யும்.இவ்​வாறு அவர் கூறி​னார்.

பேரவையின் ஆண்டு முதல் கூட்டம், கடந்த ஜன.20-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் பேரவையை விட்டு வெளியேறினார். தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜன.22-ம் தேதி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 24-ம் தேதி பதில் அளித்தார்.

இதையடுத்து, மறு தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இடைக்கால பட்ஜெட்டுக்காக பிப்.17-ம் தேதி மீண்டும் கூடுகிறது.

பேரவை கூட்​டம் பெரும்​பாலும், பிப்​.20-ம் தேதி வரை நடை​பெறும் என்று தலை​மைச் செயலக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது. தேர்​தல் நெருங்​கு​வ​தால், இடைக்​கால பட்​ஜெட்​டில் வழக்​க​மான நிதி ஒதுக்​கீடு​கள் மட்​டுமின்​றி, மக்​களைக் கவரும் பல முக்​கிய அறி​விப்​பு​களும் இடம்​பெறும்​ என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT