தமிழகம்

ஜனநாயகன் பட விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் அரசியல்: தமிழக பாஜக குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ‘ஜனநாயகன்’ படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்குவதற் காக, சில குறிப்பிட்ட காட்சிகளை நீக்கும்படி படக்குழுவினருக்கு தணிக்கைத் துறைஅறிவுறுத்தி உள்ளது.

ஆனால், அந்த மாற்றங்களைச் செய்யபடக்குழுவினர் மறுத்து வருவதாகத் தெரிகிறது. இது தணிக்கைத் துறைக்கும் படக்குழுவுக்கும் இடையிலான நடைமுறைச் சிக்கலாகும்.

ஆனால், தேர்தலை மனதில்வைத்து, மக்களை திசை திருப்புவதற்காக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT