தமிழகம்

‘பெரியார் அறிவுலகம் விவகாரத்தில் திமுக மீது பழி போட நினைக்கிறார்கள்’ - டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: “பெரியார் அறிவுலகம் நூல​கத்​துக்​காக அதிக விலைக்கு புத்​தகங்​களை வாங்​கி​விட்டு, அந்​தப் பழியை திமுக மீது போட நினைக்​கிறார்​கள்” எனத் திமுக செய்​தித் தொடர்​புத் தலை​வர் டி.கே.எஸ். இளங்​கோவன் கண்டனம் தெரி​வித்​துள்​ளார்.

இது​குறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: திமுக ஆட்​சிக்கு வந்த பிறகு மூன்று நூல​கங்​கள் திறக்​கப்

​பட்​டன. குழந்​தைகள் படித்து அறிவை வளர்த்​துக் கொள்ள வேண்​டும் என்​ப​தால் மேலும் சில நூல​கங்​களைத் திறக்க நாங்​கள் திட்​ட​மிட்​டிருந்

​தோம். ஆனால் இப்​போது, இந்த ஆட்சி வந்த பிறகு, அவர்​கள் பணம் சம்​பாதிக்க விரும்​பு​கிறார்​கள்.

எனவே அவர்​கள் செய்​தது என்​னவென்​றால், பெரியார் அறிவுலகம் நூல​கத்​துக்​காக அதிக விலைக்கு புத்​தகங்​களை வாங்​கி​விட்டு, அந்​தப்பழியை திமுக மீது போட நினைக்கிறார்​கள். திமுக ஒருபோதும் அதைச் செய்​யாது.

தமிழகத்தில் மிகச்​சிறந்த நூல​கங்​களை அமைந்தது திமுக ஆட்​சி​யில்​தான்.பெரியார் அறிவகம் நூல​கத்​துக்​காக வாக்​கப்​பட்ட நூல்​கள்மற்​றும் எழுத்​தாளர்​களின் பெயர்​களே, அது தவெக​வின் சதி என்​பதை தெளிவாகக் காட்​டு​கிறது.

‘திரிஷா-விஜய்’ என்​பவர் ஒரு புத்​தகத்​தின் எழுத்​தாளராம். இது வெட்​கக்​கேடானது இல்லையா. அந்​தப் புத்​தகத்தை திமுகதான் வாங்​கியது என்று அவர்​கள் கூறுகிறார்​கள். பாஜக தான் அவர்​களை திமுகவை தாக்​கிப் பேசுமாறு கூறியுள்​ளது; அதைத்​தான் அவர்​கள் உண்​மையாகச் செய்து வரு​கிறார்​கள்.

இல்லை​யெனில் அவர்​கள் மாட்​டிக்​கொள்​வார்​கள். பாஜக​விட​மிருந்து விஜய்​யைப் பாது​காக்க அவர்​கள் விரும்​பு​கிறார்​கள்.

ஏனெனில், சட்​ட​விரோத​மான வழிகள் மூலமாகவே விஜய்யை பாஜக அதி​காரத்​துக்​குக் கொண்டு வந்​துள்​ளது. எலக்ட்​ரானிக் வாக்​குப்​ப​திவு இயந்​திர மோசடி மற்​றும் எஸ்ஐஆர் மூலமாக மட்​டுமே விஜய் ஆட்​சிக்கு வந்​தார். மக்​களின் வாக்​கு​களால் அல்ல என்​பதை என்​னால் கூற முடியும். இவ்​வாறு டி.கே.எஸ்.இளங்​கோவன் தெரி​வித்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT